2024ல் பாரிஸ், 2028ல், லாஸ் ஏஞ்சலஸில் அடுத்த ஒலிம்பிக்!

Posted By: Staff

லிமா: 2016 ஒலிம்பிக் போட்டியை பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடத்துவதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள சூழ்நிலையில், எந்தப் பிரச்னையில், அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடத்த உள்ள நாடுகளின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.

வரும், 2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும், 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலும் நடக்கும் என, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2020 ஒலிம்பிக், ஜப்பானின் டோக்கியோ நகரில் நடக்க உள்ளது.

Paris, LA to host Olympics

2024ல் நடக்க உள்ள 33வது ஒலிம்பிக் போட்டி மற்றும், 2028ல் நடக்க உள்ள, 34வது ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரங்களை தேர்வு செய்யும் கூட்டம் நேற்ரு நடந்தது. 2024 போட்டியை நடத்த, ஜெர்மனியின் ஹம்பர்க், இத்தாலியின் ரோம், ஹங்கேரியின் புடாபெஸ்ட் ஆகியவையும் விருப்பம் தெரிவித்திருந்தன. ஆனால், அவை நிதி நெருக்கடியை காட்டி கடைசி நேரத்தில் விலகிக் கொண்டன. அதனால், பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடத்துவது என, ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

2028ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு யாருமே முன்வராததால், போட்டியின்றி லாஸ் ஏஞ்சலஸ் வென்றது.

இந்த அறிவிப்புகள் வெளியானது, பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரம் முன், ஒலிம்பிக் சின்னம் ஒளிவிளக்குகளால் அமைத்து மக்கள் கொண்டாடினர்.

பாரிஸ் நகரில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் நடக்க உள்ளது.\

1900 மற்றும் 1924ல் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளது. நூறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அங்கு மூன்றாவது முறையாக ஒலிம்பிக் நடக்க உள்ளது. போட்டியை நடத்த நடுவில் மூன்று முறை பாரிஸ் போட்டியிட்டது, ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

1996ல் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, அமெரிக்காவில், 2028ல் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரில், 1932, 1984க்குப் பிறகு, வரும், 2028ல் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது.

Story first published: Thursday, September 14, 2017, 13:53 [IST]
Other articles published on Sep 14, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற