For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த நாள் ஞாபகம்.. லார்ட்ஸ் மைதானத்தை சிலிர்க்க வைத்த கிரிக்கெட் சிங்கங்கள்!

லண்டன்: லார்ட்ஸ் மைதானமே கூட சற்று சிலிர்த்துப் போயிருக்கும்.. பின்னே, அத்தனை கிரிக்கெட் சிங்கங்களும் ஒரே நேரத்தில் கூட இரு அணிகளாக பிரிந்து பிரமாதமாக ஆடியதைப் பார்த்தால் சிலிர்க்காமல் இருக்குமா.

மறக்க முடியாத சனிக்கிழமையாக கடந்த சனிக்கிழமை இந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு அமைந்து போனது. லார்ட்ஸ் மைதானத்தின் 200வது ஆண்டையொட்டி நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எம்சிசி கிளப் அணியும், ரெஸ்ட் ஆப் தி வேர்ல்ட் அணியும் மோதிய நாள் அது.

சச்சின் டெண்டுல்கர் தலைமையில் எம்சிசி அணியும், ஷான் வார்னே தலைமையில் ரெஸ்ட் ஆப் தி வேர்ல்ட் அணியும் மோதின.

இந்தப் போட்டியின் புகைப்பட ஆல்பம் இது.... லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இடம் பெற்றுள்ளவற்றிலிருந்து!

அட்டேன்ஷன்....!

அட்டேன்ஷன்....!

சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான எம்சிசி கிளப் அணி வீரர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். யாரெல்லம் உட்கார்ந்திருக்கிறார்கள் பாருங்கள்.. அட சச்சின் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலைப் பாருங்கப்பா.. கம்பீரம் தல!

வார்னேக்கு பீச்சாங்கை பக்கம் யாருன்னு பார்த்தீகளா...!

வார்னேக்கு பீச்சாங்கை பக்கம் யாருன்னு பார்த்தீகளா...!

இது ஷான் வார்னே தலைமையிலான ரெஸ்ட் ஆப் தி வேர்ல்ட் அணி. இடது ஓரமாக உட்கார்ந்திருப்பவர் முரளிதரன்.. ஒரு காலத்தில் வார்னேவும், முரளியும் யார் பெரியவர் என்பதில் பந்து வீச்சு மூலம் போரே நடத்தியவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

சாமியே.. சச்சினப்பாவின் பக்தர்...!

சாமியே.. சச்சினப்பாவின் பக்தர்...!

இவர்தான் யுவராஜ் சிங். சுவாமி சச்சின் டெண்டுல்கரானந்தாவின் முதன்மையான சிஷ்யர் - பக்தர் - ரசிகர். பேட் செய்ய களம் புகுகிறார்.. அட்டகாசமான சதம் போட்டார் இப்போட்டியில் யுவி.

டாஸ் வென்ற வார்னே

டாஸ் வென்ற வார்னே

இரு கேப்டன்களும் டாஸுக்கு நிற்கின்றனர். வார்னே டாஸ் வென்றார். முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஹாய் ஹாய்... !

ஹாய் ஹாய்... !

லெஜண்டுகள் இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் பழைய நெனப்புடா பேராண்டி என்று மட்டும் நமக்குத் தோன்றுகிறது.

மறக்க முடியாத முரளி....

மறக்க முடியாத முரளி....

சுழற்பந்து வீச்சில் ஜாலம் காட்டிய ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வருகிறார்.

கலக்கிட்டோம்ல...

கலக்கிட்டோம்ல...

132 ரன்களை விளாசிய யுவராஜ் சிங் தனது சதத்தைக் கொண்டாடுகிறார்.

அட லீ...

அட லீ...

ரொம்ப காலத்திற்குப் பிறகு பிரட் லீ பந்து வீசியதை ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர். ஒரு காலத்தில் உலகின் அதி வேக வேகப் பந்து வீச்சாளர் இவர்தான். சச்சினுக்கும், இவருக்குமான பேட்டிங் -பவுலிங் மோதல் பிரசித்தம்.

22 ரன்களில் வீழ்ந்த ஷேவாக்

22 ரன்களில் வீழ்ந்த ஷேவாக்

இந்தியாவின் வீரேந்திர ஷேவாக் வேகமாக ஆடினார்.. 22 ரன்களைச் சேர்த்தார்.. லீ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பாத்துப் போடுங்க சாமி....

பாத்துப் போடுங்க சாமி....

சச்சின் பந்து வீசத் தயாராகிறார். 4 ஓவர்களா் வீசிய சச்சின் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்தார்.. அந்த விக்கெட் யார் தெரியுமா.. பேட்டிங்கின்போது தனது காலில் விழுந்து ஆசி பெற்ற சாட்சாத் யுவராஜ் சிங்கைத்தான்!.

3 கண்களுடன் கில்லி...

3 கண்களுடன் கில்லி...

கில்கிறைஸ்ட் இப்போட்டியில் ஹெல்மட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவுடன் ஆடினார்.

இக்பாலை வீழ்த்திய அஜ்மல்

இக்பாலை வீழ்த்திய அஜ்மல்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், தமீம் இக்பாலை வீழ்த்தியபோது எடுத்த படம்....

லீயின் கொண்டாட்டம்

லீயின் கொண்டாட்டம்

ஷேவாக்கை வீழ்த்தியதைக் கொண்டாடும் லீ அன் கோ.

லாங் ரூமில்.. ஷார்ட் பேச்சு

லாங் ரூமில்.. ஷார்ட் பேச்சு

போட்டி தொடங்குவதற்கு முதல் நாள் லார்ட்ஸ் மைதானத்தின் லாங் ரூமில் பேசிக் கொண்டிருந்த சச்சின், வார்னே...

செல்பிக்கு கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ்...

செல்பிக்கு கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ்...

செல்போன், டேப், லேப் டாப் காலம் மட்டுமல்ல.. செல்பி காலமும் கூட. இவர்களையும் அது விடவில்லை. பாருங்கா என்னா ஒரு சிரிப்புடன் போஸ்.. கலக்கல் பாஸ்!

கில்லி அவுட்

கில்லி அவுட்

கில்கிறைஸ்ட் ஸ்ட்ம்ப்ட் செய்யப்பட்ட காட்சி. 21 ரன்களை எடுத்தார் கில்லி.

சத்தாய்த்த சதம்

சத்தாய்த்த சதம்

யுவராஜ் சிங் அருமையாக ஆடி அனைவரையும் கவர்ந்தார். இது அவர் சதம் போடுவதற்கு முன்பு ஆடிய ஒரு ஷாட்.

Story first published: Monday, July 7, 2014, 12:26 [IST]
Other articles published on Jul 7, 2014
English summary
It was a special one-day game at the Lord's Cricket Ground here on Saturday. To celebrate the ground's 200th birthday, the legends of the game came together. Match Report Marylebone Cricket Club (MCC), captained by Sachin Tendulkar and Shane Warne-led Rest of the World (ROW) came face to face in a 50-over exhibition match. Warne won the toss and opted to bat first. Brian Lara, Rahul Dravid, Muttaiah Muralitharan and other stars played this game. Adam Gilchrist and Virender Sehwag opened the batting for ROW while Brett Lee bowled the first over of the match. Here are the pictures from the match. All photos courtesy of Lord's Cricket Ground's official Facebook Page.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X