For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

200 மீட்டர் பைனலில் நுழைந்த உசைன் போல்ட்... ஜஸ்டின் காட்லின் அதிர்ச்சி தோல்வி

By Mayura Akilan

ரியோ: ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதி போட்டி இன்று காலை நடந்தது. இதில், எந்தவித ஆச்சரியமும் இல்லாத வகையில் ஜமைக்காவின் உசைன் போல்ட் 19.78 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் ரியோ ஒலிம்பிக் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் அரையிறுதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

Rio 2016: Usain Bolt reaches men's 200m final but Justin Gatlin out

ஜமைக்காவின் உசைன் போல்ட் 19.78 வினாடிகளில் பந்தைய தூரத்தைக் கடந்து இந்த ஆண்டின் தனது வேகமான ஓட்டத்தை பதிவுசெய்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த சீசனில் அவரது சிறப்பான ஓட்டம் இதுவாகும்.

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 5 முறை பதக்கம் வென்றுள்ள அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் அரையிறுதிப்போட்டியில் பந்தைய தூரத்தை 20.13 வினாடிகளில் கடந்தார்.

இதனால், தான் இடம்பெற்றிருந்த ஹீட்டில் மூன்றாவது இடம் பெற்ற அவர் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். 0.03 வினாடிகளில் அவர் இறுதிச்சுற்று வாய்ப்பை பறிகொடுத்துள்ளார்.

இதனால், ஜஸ்டின் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று நம்பிக்கொண்டிருந்த அமெரிக்க ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே ரியோவில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் உசைன் போல்ட் தங்கம் வென்றுள்ளார்.

200 மீட்டர் ஓட்டத்திலும் அவர் வெற்றி பெறும் பட்சத்தில், ஒட்டு மொத்தமாக ஒலிம்பிக்கில் அவர் வெல்லும் 8வது தங்க பதக்கமாக அது அமையும்.

இதற்கு ஏற்றாற்போல் அவருக்கு கடும் சவால் அளித்து வந்த அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் தோல்வி கண்டு, பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஜமைக்காவின் மற்றொரு முன்னணி ஓட்டப்பந்தய வீரர் யோகன் பிளாக்கும் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளார். இதனால் பைனலில் உசைன் போல்ட் எளிதில் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, August 18, 2016, 18:04 [IST]
Other articles published on Aug 18, 2016
English summary
Usain Bolt ran his fastest time of the season to win his Olympic 200m semi-final in 19.78 seconds as Justin Gatlin missed out on a place in the final.
 Jamaica's Bolt has already won the 100m and is now aiming for an eighth Olympic gold by retaining his 200m title.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X