For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"கிராமத்தில்" தங்க மறுத்த ஆஸி. வீரர்கள்.. ஒலிம்பிக் வில்லேஜில் பரபரப்பு!

By Mayura Akilan

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிராமத்தில் தங்கள் நாட்டு வீரர்கள் நுழைய மாட்டார்கள் என ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. போட்டியாளர்கள் அங்கு வசிக்க முடியாத சூழல் இருப்பதாக காரணம் கூறப்படுகிறது.

பிரேசிலின் ரியோ -டி- ஜெனிரோ நகரில், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. இதற்காக பல ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒலிம்பிக் கிராமம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

இதில் 31 கட்டிடங்களில் 3,604 அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட்கள் உள்ளன. இதில் 17,000 வீரர், வீராங்கனைகள், மற்றும் அதிகாரிகள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

ஒலிம்பிக் கிராமம்

ஒலிம்பிக் கிராமம்

ஒலிம்பிக்கின் பிரதான போட்டிகள் நடக்கவுள்ள பார்ரா ஒலிம்பிக் பார்க் மைதனத்துக்கு அருகே இந்த ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து 66 தேசிய ஒலிம்பிக் கமிட்டியிகளின் 900 வீரர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒலிம்பிக் கிராமத்தை, ரியோ நகர மேயர் எட்வார்டோ பயஸ் திறந்து வைத்தார்.

பிரம்மாண்ட குடியிருப்புகள்

பிரம்மாண்ட குடியிருப்புகள்

இந்த கிராமத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள், பெழுதுபோக்கு பகுதிகள், சைக்கிள் பாதைகள், வீரர்கள் பயிற்சி செய்ய பெரிய ஜிம், பிரமாண்ட டைனிங் ஹால் என எல்லா வசதிகளும் உள்ளது.

60000 வகை உணவுகள்

60000 வகை உணவுகள்

இந்த டைனிங் ஹால் சுமார் 27,000 சதுரடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 5,000 பேர் அமர்ந்து சப்பிட முடியும். தவிர, ஒரு நாளைக்கு 60,000 சாப்பாட்டு வகைகளை செய்ய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா கமிட்டி

ஆஸ்திரேலியா கமிட்டி

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கள் நாட்டு வீரர்கள் நுழைய மாட்டார்கள் என ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. போட்டியாளர்கள் அங்கு வசிக்க முடியாத சூழல் இருப்பதாக காரணம் கூறப்படுகிறது.

வசதிகள் சரியில்லை

வசதிகள் சரியில்லை

அடைப்பு ஏற்பட்ட கழிவறைகள், வெளியே தெரியும் வயர்கள், கசியும் குழாய்கள் மற்றும் விளக்கு வசதி இல்லாத படிகள் ஆகிய பிரச்சினைகள் இருப்பதாக ஆஸ்திரேலிய குழுவின் தலைவர் கிட்டி சில்லர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் தீருமா?

பிரச்சினைகள் தீருமா?

ஒலிம்பிக் கிராமத்தில் கூடுதல் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணியாளர்களின் வேலை நடந்துவரும் போதிலும், இந்த பிரச்சினைகள் எப்போது தீர்த்து வைக்கப்படும் என்பதை சொல்ல முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

விடுதியில் தங்கிய வீரர்கள்

விடுதியில் தங்கிய வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியானது அருகே உள்ள விடுதிகளில் தங்கி உள்ளது. தங்கள் அணியை போலவே பிரிட்டிஷ் மற்றும் நியுசிலாந்து அணியினரும் இதே பிரச்சினையை சந்தித்து வருவதாக சில்லர் கூறியுள்ளார்.

Story first published: Monday, July 25, 2016, 14:16 [IST]
Other articles published on Jul 25, 2016
English summary
Australia are refusing to move their athletes into the Rio Olympic Village because of concerns about the state of their accommodation.roblems include "blocked toilets, leaking pipes and exposed wiring", according to team boss Kitty Chiller.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X