For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீராங்கனைகள் ஆடைகளை களைந்து.. 'கன்பார்ம்' செய்து.. இந்த அசிங்கத்தை ஒலிம்பிக் கமிட்டி நிறுத்தாதா?

By Veera Kumar

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் உண்மையிலேயே பெண்கள்தானா என்பதை சோதித்து பார்க்கும் நடைமுறை அவர்களை கூச செய்வதாகவே உள்ளது.

ஆண் வீரர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றபோதிலும், ஆண் தன்மை கொண்டவர்கள் பெண்கள் பிரிவில் சேர்ந்து ஆடுவது, பிற மகளிருக்கு அநீதி இழைப்பதை போலாகும் என்று எண்ணும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதுபோன்ற சோதனைகளை நடத்துகிறது.

பல வகை சோதனைகள் இருந்தாலும், 'செக்ஸ் டெஸ்ட்' என்பதுதான் மகளிரை கூனி குறுக செய்யும் ஒரு சோதனையாகும்.

இந்திய வீராங்கனைகள்

இந்திய வீராங்கனைகள்

நீச்சல் உடையை பொது இடங்களிலும் சாதாரணமாக அணியும் மேலை நாட்டு வீராங்கனைகளைவிட, பாரம்பரியம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பெண்களுக்கு இந்த சோதனை பெரும் அக்னி பரிட்சையாகும்.

டெஸ்ட்

டெஸ்ட்

1936ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற செக்ஸ் டெஸ்ட்டுகள் நடந்து வந்தாலும், 1968க்கு பிறகே இது அதிகாரப்பூர்வமாக வெளியே சொல்லப்பட்டது.

கண்ணால் பார்ப்பது

கண்ணால் பார்ப்பது

இந்த சோதனை பல கட்டமாக நடக்கும். முதலில் கண்ணால் பார்த்து உறுதி செய்யும் சோதனை. வீராங்கனைகள் நிர்வாணமாக்கப்பட்டு, அவர்களின் பெண் உறுப்புகள் 'தகுதிவாய்ந்த' நிபுணரால் சோதித்து பார்க்கப்பட்டு, அவர்கள் பெண்கள்தான் என்று உறுதி செய்யப்படும்.

அடுத்தகட்ட டெஸ்ட்

அடுத்தகட்ட டெஸ்ட்

இதன்பிறகு க்ரோமோசோம் டெஸ்ட், டிஎன்ஏ டெஸ்ட் போன்றவையும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஆய்வாளர்களும், வழக்கறிஞர் குழுக்களும், இந்த சோதனைகளை நிறுத்த கோரிக்கைவிடுத்தும் நடப்பதாக இல்லை.

கண்டுகொள்ளவில்லை

கண்டுகொள்ளவில்லை

அறிவியல் முறைப்படி, க்ரோமோசோம், டிஎன்ஏ போன்ற சோதனைகளால் மட்டும் பாலினத்தை உறுதி செய்ய முடியாது என்பது அறிவியலாளர்கள் வாதம். ஆனால், ஒலிம்பிக் கமிட்டி தொடர்ந்து அதை உதாசீனப்படுத்தி வருகிறது.

Story first published: Saturday, August 6, 2016, 17:07 [IST]
Other articles published on Aug 6, 2016
English summary
Sex-testing, which is done only to female athletes. That's not the terminology the IOC uses, but most people refer to it as such because that's what it is, testing for biological sex.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X