For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு ! ஸ்மிருதி ராணி ஜவுளித் துறைக்கு மாற்றம் !!

By Karthikeyan

டெல்லி: மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி ஏற்கனவே வகித்த இலாக்காக்கள் மாற்றப்பட்டன. அதன்படி புதிய இலாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி , ஜவுளித்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பிரகாஷ் ஜவடேகர் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

 Smriti Irani dropped as HRD minister

இந்நிலையில் மத்திய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகருக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை வெங்கய்யா நாயுடுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னதாக நகர்ப்புறம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார்.

ரவிசங்கர் பிரசாத் சட்டம் மற்றும் நீதி , தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்திலும், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இராணி ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக விஜய் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அனில் மாதவ் தவே சுற்றுச்சூழல் துறைக்கும், சட்டத்துறை அமைச்சராக இருந்த சதானந்த கவுடா புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விமான போக்குவரத்து துறை இணை அமைச்சராக ஜெயந்த் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை இணை அமைச்சராக அக்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அனுப்பிரியா பட்டேலுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹன்ஸ்ராஜ் கங்காராமுக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சராக எஸ்.எஸ். அலுவாலியாவும், ராவ் பிரேந்திரசிங் இரும்பு உருக்கு துறை அமைச்சராக உள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக அனந்தகுமார் நியமிக்கப்பட்டுளாளார். ஃபாகான்சிங் குலாஷ்தே சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சராகவும்,அஜெய் தம்தா ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அர்ஜூன் ராம் நிதி மற்றும் கார்பரேட் விவகாரத்துறை இணை அமைச்சராகவும், ராம்தாஸ் அத்வாலே, சமூக நீதித்துறை இணை அமைச்சர் பதவியும், ரமேஷ் சண்டப்பா குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Wednesday, July 6, 2016, 10:37 [IST]
Other articles published on Jul 6, 2016
English summary
Smriti Irani has been shifted out of HRD ministry to the Textiles Ministry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X