For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெக்லேரன் இல்லாமல் உலகக் கோப்பையைச் சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்கள் ஏமாற்றம்!

By Veera Kumar

கேப்டவுன்: ஆல் ரவுண்டர் கல்லீஸ் இல்லாமல் உலக கோப்பையை சந்திக்க உள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, வலுவான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் வெளியிட்ட நிலையில், தென் ஆப்பிரிக்காவும் தனது அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

South Africa leave out Ryan McLaren from 15-man World Cup squad

தென் ஆப்பிரிக்க அணியின் விவரம்: ஏபி டி வில்லியர்ஸ் (கேப்டன்) ஹசீம் ஆம்லா (துணை கேப்டன்), கைல் அப்போட், பர்கான் பெகார்டின், குயின்டோன் டி கோக், ஜேபி டும்னி, பாப் டு ப்ளெஸ்சிஸ், இம்ரான் தாஹீர், டேவிட் மில்லர், மோர்னே மோர்க்கல், வேயின் பர்னெல், ஆரோன் பான்கிசோ, வெர்னோன் பிலான்டர், ரிலீ ரோஸ்சுவ், டேல் ஸ்டெயின்.

தென் ஆப்பிரிக்காவின் சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கிய ஜாக் கல்லீஸ், கடந்த சில மாதங்கள் முன்பு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். எனவே அவரது இடத்தை நிரப்பும் வீரரை தேர்வு செய்யும் பெரும் பொறுப்பு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு இருந்தது.

இந்நிலையில், தெ.ஆப்பிரிக்க அணியின், ரியான் மெக்லேர்ன், சிறந்த ஆல்ரவுண்டராக வளர்ந்து வந்தார். ஆனால் உலக கோப்பைக்கான அணியில் ரியான் மெக்லேர்ன் பெயர் சேர்க்கப்படவில்லை. இது தென் ஆப்பிரிக்க ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Story first published: Thursday, January 8, 2015, 11:06 [IST]
Other articles published on Jan 8, 2015
English summary
He was once expected to fill in the huge shoes of former South African legend Jacques Kallis. But Ryan McLaren didn't find a space in South Africa's 15-man World Cup squad announced on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X