"பறக்கும்.. பந்து பறக்கும்".. கொரோனா வந்தா என்னய்யா.. நாங்க விளையாடுவோம்ல!

மாட்ரிட்: கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு வரும் மக்கள் அதிலிருந்து மீள விதம் விதமான டெக்னிக்குகளை கையாள ஆரம்பித்துள்ளனர்.

'பறக்கும்.. பந்து பறக்கும்'.. கொரோனா வந்தா என்னய்யா.. நாங்க விளையாடுவோம்ல! - வீடியோ

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ மீட்ட மாட்டாயா என்று பாரதிதாசன் அன்றே பாடியுள்ளார். அதற்கேற்ப மக்களும் இந்த கொரோனா துயரத்திலிருந்து தங்களை மீட்டெடுக்க விதம் விதமான பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பாவில் பல நாடுகள் கொரோனாவால் முடங்கிப் போய் விட்டன. குறிப்பாக இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பரவல்

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பரவல்

வைரஸ் பரவலைத் தடுக்க விளையாட்டுப் போட்டிகள் அனைத்தையும் ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி விட்டன. முக்கியமான கால்பந்து தொடர்கள் அனைத்தும் ரத்தாகி விட்டன. டென்னிஸ் போட்டிகளும் நடைபெறவில்லை. வீரர்கள் அனைவரும் வீடுகளோடு முடங்கியுள்ளனர். மக்களும் கூட வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

பால்கனியில் நின்று பாடுகிறார்கள்

பால்கனியில் நின்று பாடுகிறார்கள்

மக்கள் பெரும்பாலும் வெளியில் வருவதில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்க சின்னச் சின்ன ஐடியாக்களை கண்டுபிடித்து தங்களுக்கு தாங்களே உற்சாகமூட்டிக் கொள்கின்றனர். சமீபத்தில் இத்தாலியில் அந்த நாட்டின் பிரபலமான ஹக் மீ பாடலை குடியிருப்புகளில் இருப்போர் பால்கனியில் வந்து நின்று கூட்டமாக பாடி உற்சாகப்படுத்திக் கொண்டனர்.

பால்கனியில் பேடில் விளையாடும் ஆண்கள்

பால்கனியில் பேடில் விளையாடும் ஆண்கள்

இந்த வரிசையில் தற்போது ஸ்பெயினில் ஒரு அருமையான சம்பவம் நடந்துள்ளது. சம்பவம்னாலே பயப்பட வேண்டியதில்லை.. இது ஜாலியான சம்பவம்தான். அங்குள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் இரண்டு ஆண்கள் பால்கனியிலிருந்தபடியே Paddle டென்னிஸ் என்ற ஒரு ஆட்டத்தை (இது ஸ்பெயினில் பிரபலமானது) ஆடுகிறார்கள். இது ஒரே வீடா அல்லது பக்கத்து பக்கத்து வீடா என்று தெரியவில்லை. ஆனால் பார்க்க படு சூப்பராக இருக்கிறது.

மன உளைச்சலைப் போக்க விளையாட்டு

ஸ்பெயினிலும் கூட இப்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்துதல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். தியேட்டர்கள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் கூட அடியோடு முடங்கி விட்டது. இதனால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் பாடல்கள் பாடியும், இதுபோல விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர். நல்ல விஷயம்தான்.. மனசும் லேசாகும்.. தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
In Spain, two men are playing with paddle racket, paddle is a sport mostly played in Spain
Story first published: Thursday, March 19, 2020, 9:58 [IST]
Other articles published on Mar 19, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X