For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை போட்டி: 2 உலக சாதனைகள்-இந்தியாவிற்கு பின்னடைவு

By
London Olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில், கொரிய வீரர்களால் 2 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. ஆனால் இந்திய வில்வித்தை அணியினர் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 64 பேர் பங்கேற்ற ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் ஒவ்வொரு அணியினரும் மொத்தம் 72 அம்புகள் எய்தனர்.

தென் கொரியாவை சேர்ந்த 3 வீரர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். இதில் டாங் ஹூயன் இம் 699 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பூப்மின் கிம் 698 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ஜின் ஹைக் ஹோ 690 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்தனர்.

போட்டியின் முடிவில் இந்திய வீரர் தருன்தீப் ராய் 664 புள்ளிகளுடன் 31வது இடத்தை பெற்றார். ராகுல் பானர்ஜி 664 புள்ளிகளுடன் 46வது இடத்தையும், ஜெயந்தா தாலூக்தார் 53வது இடத்தையும் பெற்றார். அணிகளின் பட்டியலில் இந்தியா 1969 புள்ளிகளை பெற்று 12வது இடத்தை பிடித்தது.

இதன்மூலம் தென் கொரியா அணி மொத்தம் 72 அம்புகளை எய்து 2087 புள்ளிகளை பெற்று, புதிய உலக சாதனை படைத்தது. அதேபோல டாங் ஹூயன் இம் தனி வீரர்கள் புள்ளியில், தனது முந்திய உலக சாதனையை முறியடித்து புதிய 699 புள்ளிகளுடன் புதிய உலக சாதனையை படைத்தார்.

முதல் சுற்றின் முடிவில் இந்தியாவின் தருன்தீப் ராய்(31வது இடம்) மட்டுமே, அடுத்த சுற்றிற்கு தகுதி பெறுகிறார். மற்ற 2 பேரும் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றனர். அணிகளின் பட்டியலில் கொரியா(2087 புள்ளிகள்) முதலிடத்திலும், பிரான்ஸ்(2021 புள்ளிகள்) 2வது இடத்தையும், சீனா (2019 புள்ளிகள்) 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

Story first published: Friday, July 27, 2012, 19:43 [IST]
Other articles published on Jul 27, 2012
English summary
India did not have a good start in archery at the London Olympics 2012 in the individual ranking event at the Lord's cricket ground. Tarundeep Rai was 31st after the end of individual ranking round. In the team event, India ended last at 12th.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X