For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சவுதி அரேபியா வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கலாம்-சர்வதேச ஒலிம்பிக் வாரியம் நம்பிக்கை

By
London olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு வீராங்கனைகளை அனுப்ப மறுக்கும் சவுதி அரேபியா அரசு, தனது முடிவை மாற்றிக் கொள்ளுமாறு சர்வதேச ஒலிம்பிக் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தங்களின் பேச்சுவார்த்தை வெற்றிப் பெறும் என்று நம்புவதாக சர்வதேச ஒலிம்பிக் வாரியம் தெரிவித்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சவுதி அரேபியா நாட்டு அணி சார்பாக வீரர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்த நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.

இது குறித்து சவுதி அரேபியாவை சேர்ந்த அல் சார்க், பான் அரப் ஆகிய செய்தித்தாள்களில் வெளியாகியுள்ள செய்தியில், பளு தூக்குதல், தடகளப் போட்டிகள், குதிரை சவாரி போன்ற போட்டிகளில் சவுதி அரேபியாவை சேர்ந்த வீராங்கனைகள் யாரும் தகுதி பெறவில்லை. இதனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில், பெண்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இது குறித்து சவுதி அரேபியா தேசிய ஒலிம்பிக் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஜாக்யூஸ் ரோக்ஸ் கூறியதாவது,

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சவுதி அரேபியாவை சேர்ந்த வீராங்கனைகளை அனுப்ப கோரி, அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களின் கோரிக்கையை ஏற்று சவுதி அரேபியா வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் 100 சதவீதம் உறுதியாக கூற முடியாது என்றார்.

இது குறித்து சவுதி அரேபியா அரசு அதிகாரிகளோ, அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்களோ கருத்து கூற மறுத்துவி்ட்டனர்.

Story first published: Thursday, July 12, 2012, 16:37 [IST]
Other articles published on Jul 12, 2012
English summary
The IOC is optimistic about ongoing talks with Saudi Arabia on sending women to the Olympics despite reports the ultraconservative Muslim kingdom reversed its pledge to send female athletes to the London Games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X