For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூரோ கோப்பை: ரொனால்டோவின் அனல் ஆட்டத்தில் சரணடைந்தது டென்மார்க்!

By Mathi
Cristiano Ronaldo
அரினா விவ்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பி பிரிவு லீக் போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, டென்மார்க் அணியை வீழ்த்தியது.

14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் பி பிரிவு போட்டியில் போர்ச்சுகல், டென்மார்க் ஆகியவை மோதின.

ஆட்டத்தின் முதல் பகுதியில் 25-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் பெபோ ஒரு கோல் அடித்தார். அடுத்ததாக 36-வது நிமிடத்தில் ஹெல்டெர் போஸ்டிகா மேலும் ஒரு கோல் அடிக்க போர்ச்சுகல் 2-வது கோலைப் பெற்றது. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் டென்மார்க் தரப்பில் நிக்லஸ் பதில் கோலடித்தார். இதனால் முதல் பகுதியில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

2-வது பாதி ஆட்டத்தில் டென்மார்க் வீரர்கள் ஆட்டத்தை சமன் செய்ய தொடர்ந்தும் போராடினர். ஆனால் இதற்கு 80நிமிடம் போராடியது டென்மார்க். 80-வது நிமிடத்தில் டென்மார்க்கின் நிக்லஸ் மீண்டும் கோலடித்து சமநிலைக்குக் கொண்டுவந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டம் எப்படி முடியுமோ என்ற விறுவிறுப்பில் இரு அணிகளும் அதிரடியை வெளிப்படுத்தினர். கடைசி 10 நிமிடம் அனலாக இருந்தது. ஆட்டம் முடிவடைய 3-வது நிமிடத்தில் ரொனால்டோ வழக்கம்போல அதிரடியாக பந்தை கடத்தி வர அந்த அணியின் வரேலா கோலடித்தார். அதன் பின்னர் யாரும் கோலடிக்கவில்லை. ஆட்டத்தின் முடிவில் 3-2 என்ற கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது.

ரொனால்டோ பல முறை கோல் அடிக்க முயற்சித்தும் பலனில்லாமல் போனாலும் வழக்கம்போல பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்திச் செல்லும் அனல் பாணி நேற்றைய ஆட்டத்திலும் எதிரொலித்தது. இதுவே டென்மார்க் அணிக்கு நெருக்கடியையும் உருவாக்கியது.

Story first published: Thursday, June 14, 2012, 11:15 [IST]
Other articles published on Jun 14, 2012
English summary
The exciting tempo of the European Championship extended into the tournament’s sixth day as Portugal edged Denmark 3-2 on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X