For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'சாம்பியன்ஸ் லீக் 20-20' போட்டிக்கு கேளிக்கை வரி: தமிழக அரசு அறிவிப்பு

By Chakra
Tamil Nadu govt to levy entertainment tax on Champions League 'Twenty20' series
சென்னை: ஐ.பி.எல். போட்டிக்கு கேளிக்கை வரி விதிக்கப்படுவது போல 'சாம்பியன்ஸ் லீக் 20-20' கிரிக்கெட் போட்டிக்கும் கேளிக்கை வரி விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் இன்று வணிகவரி, பதிவு துறை அமைச்சர் பி.வி.ரமணா தமிழ்நாடு கேளிக்கைகள் வரி திருத்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகள் கேளிக்கை வரி வரையரைக்குள் வருகிறது. கிரிக்கெட் போட்டியில் பெருவாரியாக பங்குபெறும் நாடுகளில் இருந்து மிகச் சிறந்த உள்நாட்டு அணிகள் இடையே சாம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் போட்டி விளையாடப்படுகிறது.

இந்தப் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. தற்போது அரசு, சாம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் போட்டிக்கு கேளிக்கை வரி விதிக்க உள்ளது. இதற்கு ஏற்ப சட்டத்தை திருத்த முடிவு செய்துள்ளது கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிக்கு கேளிக்கை வரி விதிக்கப்படுவது போல தற்போது சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கும் கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 30, 2013, 15:53 [IST]
Other articles published on Apr 30, 2013
English summary
After bringing popular cricketing tournament Indian Premier League under the Entertainment Tax regime, Tamil Nadu government today proposed to levy the tax on another Twenty20 series, the Champions League.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X