For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீசாந்த் செய்த தவறுதான் என்ன?.. டெல்லி போலீஸ் கூறுவதைக் கேளுங்கள்!

டெல்லி: கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின்போது பந்து வீசியபபோது, கையில் டவல் ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு ஸ்ரீசாந்த் பவுல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டவலை தனது பேன்ட்டில் பதுக்கி வைத்திருந்தார் அவர் என்பதும் குற்றச்சாட்டாகும்.

மே 9ம் தேதி இந்தப் போட்டி மொஹாலியில் நடந்தது. எதற்காக இந்த டவல் என்று கேட்கலாம்.

நான் இந்த ஓவரில் உங்களுக்கு சாதகமாக நடக்கிறேன் என்று புக்கிகளுக்கு ஸ்ரீசாந்த் கொடுத்த சிக்னல் தான் இது என்பது போலீஸார் கூறும் குற்றச்சாட்டாகும்.

முதல் ஓவரில் டவல் இல்லை

முதல் ஓவரில் டவல் இல்லை

அதற்கு முந்தைய ஓவரின்போது டவல் சிக்னலை ஸ்ரீசாந்த் காட்டவில்லையாம்.

டவல்இருந்தால் பெட்டுக்கு ரெடி

டவல்இருந்தால் பெட்டுக்கு ரெடி

டவல் சிக்னல் காட்டினால் அந்த ஓவரில் புக்கிகள் பெட் வைக்கலாம் என்றும் அர்த்தமாம்.

பிக்ஸ் செய்து விட்டுக் கொடுத்த 14 ரன்கள்

பிக்ஸ் செய்து விட்டுக் கொடுத்த 14 ரன்கள்

மேலும் ஏற்கனவே பிக்ஸ் செய்ததன்படி 14 ரன்களை விட்டுக் கொடுத்தாதராம் ஸ்ரீசாந்த்

பல மாத விசாரணை

பல மாத விசாரணை

ஐபிஎல்லில் நடைபெறும் பெட்டிங்குகள், ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்டவை குறித்து பல மாதங்களாகவே துப்பு துலக்கப்பட்டு வந்ததாம். போதிய ஆதாரங்கள், தகவல்களைச் சேகரித்து வைத்திருந்த போலீஸார் கடைசியில் கையும் களவுமாக பிடித்தனராம்.

கோட் வேர்ட்

கோட் வேர்ட்

மேலும் புக்கிகளுக்கும், வீரர்களுக்கும் இடையிலான தொலைபேசி அழைப்புகளும் ஆராயப்பட்டனவாம். அப்போது இரு தரப்பும் ரகசிய சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்தியதும் தெரிய வந்ததாம்.

மறதியால் 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்த சண்டிலா

மறதியால் 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்த சண்டிலா

கைதான இன்னொரு வீரரான அஜீத் சண்டிலா, புக்கிகளிடம் தான் வாங்கிய ரூ. 20 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டாராம் - காரணம் சிக்னலை உரிய முறையில் காட்ட மறந்ததால்.

புனேவுக்கு எதிரான போட்டியின்போது

புனேவுக்கு எதிரான போட்டியின்போது

மே 5ம் தேதி புனே வாரியர்ஸுக்கு எதிராக நடந்த போட்டியின்போது சிக்னலை காட்ட மறந்து விட்டாராம் சண்டிலா. அப்படிக் காட்டுவதற்காக அவர் ரூ. 20 லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம். ஆனால் சிக்னல் காட்ட மறந்ததால் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

சட்டையைக் கழற்றனுமாம்...

சட்டையைக் கழற்றனுமாம்...

அதாவது அந்த குறிப்பிட்ட ஓவரின்போது 14 ரன்களை விட்டுத் தர வேண்டும். மேலும் தனது டீ சர்ட்டை இரண்டு முறை கழற்றுவது போல செய்ய வேண்டும். இதை செய்யத் தவறி விட்டாராம் சண்டிலா.

13 ரன்களுக்கு 60 லட்சம் வாங்கிய அங்கீத் சவான்

13 ரன்களுக்கு 60 லட்சம் வாங்கிய அங்கீத் சவான்

இன்னொரு வீரரான அங்கீத் சவான், 13 ரன்களை விட்டுக் கொடுத்ததற்காக ரூ. 60 லட்சம் பணம் வாங்கினாராம்.

வேறு யாருக்கும் தொடர்பில்லை

வேறு யாருக்கும் தொடர்பில்லை

இந்த ஐபிஎல் மோசடியில் வேறு அணிகளைச் சேர்ந்த வேறு எந்த வீரருக்கும் தொடர்பு இல்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறியுள்ளார்.

Story first published: Friday, May 17, 2013, 6:37 [IST]
Other articles published on May 17, 2013
English summary
On May 9, at a match between the Kings XI Punjab and Rajasthan Royals played at Mohali near Chandigarh, pacer S Sreesanth ran up to bowl an over with a towel tucked into the band of his trouser. The Delhi Police allege that this was a signal to bookies that he would now fix an over. He had bowled the previous over without the towel. (Read: Delhi Police explains spot-fixing arrests)
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X