For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடையைத் தட்டி.. மீசையை முறுக்கும் தமிழன் - 'ரெஸ்ட்லிங்'கின் அதிரிபுதிரி ஹீரோ

சென்னை: தமிழகத்தில் இருந்து ஒரு ரெஸ்ட்லிங் வீரரை பார்ப்பது ரொம்பவே அரிது. பலருக்கும் அது கனவாக இருந்தாலும், அதை சாத்தியப்படுத்துவது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனால், அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார் இந்த தமிழ் மகன்.

தமிழகத்தில் கிரிக்கெட் என்பது உயிர் மூச்சு. அதற்கு அடுத்தபடியாக இங்கு பிரபலமாக இருப்பது கால்பந்தோ, டென்னிஸோ, பேட்மிண்டனோ அல்ல.. ரெஸ்ட்லிங்.

கோலி 'கேலி' செய்தார்.. திருப்பிக் கொடுத்தேன்.. பட், அவரே நம்பர்.1 - ஆஸி., கேப்டன்கோலி 'கேலி' செய்தார்.. திருப்பிக் கொடுத்தேன்.. பட், அவரே நம்பர்.1 - ஆஸி., கேப்டன்

WWE கார்டுகளை வாங்கி, Chest எவ்ளோ, Biceps எவ்ளோ, Height எவ்ளோ என்று கேட்டு விளையாடாத 90'ஸ் கிட்ஸ்களே இருக்க முடியாது. ராக், ஜான் சினா, கேன் தொடங்கி இந்தியாவின் தி கிரேட் காளி வரை என்று ஒவ்வொருவருக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

 நேஷனல் சாம்பியன்

நேஷனல் சாம்பியன்

ஆனால், இதுவரை ரசிகர்களில் ஒருவராக கைத்தட்டி, விசிலடித்து கொண்டாடிய ஒரு நபர், திடீரென ரெஸ்ட்லிங் ஹீரோவாக உருவெடுத்தால்..? WWE ரிங்-குக்குள் நின்று எதிராளிகளை துவம்சம் செய்தால்.... ஆம்! தமிழகத்தில் இருந்து ஒரு வீரர் ரெஸ்ட்லிங் ரிங் ஏறி கலக்கிக் கொண்டிருக்கிறார். ப்ரோ ரெஸ்லிங் உலகின், முதல் தமிழனாக சாதனை படைத்தவர், CWE-யின் நேஷனல் சாம்பியன் ஜெய் ஜாக்சன். திண்டுக்கல்லில் இருந்து இன்று ரெஸ்ட்லிங்கில் தனக்கென ஒரு முத்திரை பதித்திருக்கிறார்.

 விவசாய குடும்பம்

விவசாய குடும்பம்

இவரது உண்மையான பெயர் ஜெயபாண்டியன். ஜெய் ஜாக்சன் என்பது ரிங் பெயர். திண்டுக்கல் மாவாட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள முத்துக்காமன்பட்டி எனும் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு மொத்தம் நான்கு மூத்த சகோதரர்கள் இருக்கிறார்கள்.

 கிரேட் காளி நண்பர்

கிரேட் காளி நண்பர்

சிறுவயதில் இருந்தே ரெஸ்ட்லிங் மீதிருந்த ஆர்வத்தால், கடும் முயற்சிக்கும், உழைப்புக்கும் பிறகு தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் இந்திய ரெஸ்ட்லிங் ஹீரோ, 'தி கிரேட்' காளி-யின் நெருக்கமான நண்பரும் கூட. இன்னும் சொல்லப்போனால், காளி இவரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கச் சொல்லி கேட்கும் அளவுக்கு நெருக்கமானவர்கள். இந்த யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது ஜெய் ஜாக்சன் கூறியிருக்கிறார்.

 கனவு, லட்சியம்

கனவு, லட்சியம்

அதுமட்டுமின்றி, இவர் கொரோனா குறித்து அறிவுரை கூறவும் தவறவில்லை. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் போது, ஏன் வீட்டை விட்டு வெளியே வரணும்? வந்து போலீசிடம் அடி வாங்க வேண்டும்? என்று தனது வேதனையை பதிவு செய்திருக்கிறார். மேலும், WWE-ல் ஒரு சாம்பியன்ஷிப் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், இன்னமும் இவரை பேருக்கு யாரென்றே தெரியவில்லை என்பது தான்.

Story first published: Thursday, May 20, 2021, 20:30 [IST]
Other articles published on May 20, 2021
English summary
tamil wrestler jey jackson ordinary family - ஜெய் ஜாக்சன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X