For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் விவகாரத்தில் தலையிட்ட ரவி சாஸ்திரி.. மன அழுத்தம் தந்த பிரச்னை.. வீராங்கனைகளுக்காக ஆதரவு!

டோக்கியோ: ஒலிம்பிக்கில் தற்போது பேசுப்பொருளாக உள்ள நயோமி ஒசாகா மற்றும் சிமோனே பில்ஸ் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தலையிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

என்னதான் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்றாலும், மனநிலை சரியில்லாத காரணத்தால் 2 தலைசிறந்த வீராங்கனைகள் தொடரை விட்டு வெளியேறியது பரபரப்பை கிளப்பியது.

ஒலிம்பிக்கில் மோசமாகும் நிலை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நிர்வாகிகள்.. கொரோனா பாதிப்பு!ஒலிம்பிக்கில் மோசமாகும் நிலை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நிர்வாகிகள்.. கொரோனா பாதிப்பு!

சிமோன்

சிமோன்

அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். 6 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற உலகின் தலைசிறந்த வீராங்கனையான இவர், டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் இருந்து திடீரென வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு அதிக மன அழுத்தம் இருப்பதாகவும், மருத்துவப் பரிசோதனை செய்யவிருப்பதாகவும் கூறி அவர் வெளியேறினார். இந்தாண்டு அவர் 13.766 என்ற தனது ஒலிம்பிக் வாழ்க்கையின் மிகக் குறைந்த புள்ளிகள் பெற்ற பிறகு பைல்ஸ் அரங்கிலிருந்து வெளியேறினார்.

ஒசாகா

ஒசாகா

இதே போல ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகாவும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து திடீரெனெ வெளியேறினார். அவரும் மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினார். கடந்த ஒரு வருடமாகவே மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு இது முதல் ஒலிம்பிக் ஆகும். நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். எல்லா தோல்விக்கு பின்பும் நான் கலங்குவது இயல்பு. ஆனால் இந்த தோல்வி மிக மோசமானதாக இருக்கிறது. நான் திட்டமிட்ட எதுவும் சரியாக நடக்கவில்லை. எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சாஸ்திரி அட்வைஸ்

சாஸ்திரி அட்வைஸ்

இவர்கள் இருவரின் பெயர்களும் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவிசாஸ்திரி ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். மனநிலையை சரிசெய்துகொள்ள போதுமான காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் சிமோன். இந்த சிறுவயதில் நீங்கள் பலவற்றை சாதித்துவிட்டீர்கள். 48 மணி நேரம் அல்லது 48 நாட்கள் கூட ஆகலாம். ஆனால் ஓய்வை எடுத்துக்கொள்ளுங்கள் யாருக்கும் எதற்காகவும் நீங்கள் விளக்கம் தர தேவையில்லை. நயோமி ஒசாகாவுக்கும் இதையே தான் சொல்ல விரும்புகிறேன். உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

ரவிசாஸ்திரி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இந்திய அணி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்காக இந்திய வீரர்களுக்கு தீவிர பயிற்சியை அளிக்கும் பணியில் அவர் உள்ளார்.

Story first published: Thursday, July 29, 2021, 16:53 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Team India Cricket coach Ravi Shastri Supports and cheers up for Simone Biles
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X