அவர் எடுத்தது ரொம்ப தப்பான முடிவு.. சிஎம் பங்க்கை காய்ச்சி எடுத்த அண்டர்டேக்கர்!

நியூயார்க் : WWE ரெஸ்லிங் ஜாம்பவான் அண்டர்டேக்கர், சிஎம் பங்க் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

சிஎம் பங்க் WWEவில் உச்சத்தில் இருந்த போது நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் விலகினார்.

அதன் பின் அவர் மீண்டும் WWEக்கு வரவில்லை. யுஎஃப்சி எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்றார்.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால், அவர் யுஎஃப்சியில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஒரீரு போட்டிகளுடன் அவரது யுஎஃப்சி பயணம் நின்று விட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டுடன் ரெஸ்லிங்கில் இருந்து ஓய்வு பெற்ற அண்டர்டேக்கர் அவரது முடிவு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

நட்சத்திரம்

நட்சத்திரம்

"பங்க் WWEஇல் பெரிய வீரர். அவரது மாற்றம் எனக்கு புரியவில்லை. அவருக்கு கம்பெனியுடன் சில பிரச்சனைகள் இருந்தது. சில சமயம் புதிய சவால்களை செய்ய சிலர் விரும்புவர். ஆனால், அவர் மலையின் உச்சியில் இருந்தார். கம்பெனியின் நட்சத்திரமாக இருந்தார்" என்றார் அண்டர்டேக்கர்.

ரொம்ப லேட்

ரொம்ப லேட்

"அப்போது என்ன நடந்தது என எனக்கு முழுவதுமாக தெரியாது. அப்போது நான் அங்கே அதிகமாக இருக்கவில்லை. ஆனால், அவர் யுஎஃப்சியில் சண்டையிடும் அளவுக்கு அனுபவம் இல்லாதவர். அவர் அந்த விளையாட்டுக்கு தாமதமாக சென்றார். அந்த மாற்றத்தை அவர் தாமதமாக செய்தார்" என்றார்.

காரணம் யார்?

காரணம் யார்?

சிஎம் பங்க் WWE-ஐ விட்டு வெளியேற அண்டர்டேக்கரின் ரெஸ்ஸில்மேனியா போட்டி தான் காரணம். அண்டர்டேக்கருக்கு எதிராக பிராக்லெஸ்னரை மோத வைத்தது WWE. அந்த முடிவை எதிர்த்த பங்க், தான் அண்டர்டேக்கருக்கு எதிராக மோத வேண்டும் என கூறினார். அந்த விவகாரத்தில் தான் அவர் WWE-ஐ விட்டு விலகினார் எனபது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Undertaker criticises CM Punk’s decision to leave WWE
Story first published: Friday, January 22, 2021, 17:30 [IST]
Other articles published on Jan 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X