For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பர்த்டே பார்ட்டி கொண்டாடிய உசைன் போல்ட்-க்கு கொரோனா வைரஸ்.. கிறிஸ் கெயிலும் பங்கேற்று இருந்தார்!

ஜமைக்கா : உலகின் சிறந்த ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் அவர் தன் 34வது பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாடினார்.

அதன் காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

40 கோடி-லாம் கொடுக்க முடியாது.. ஆளை விடுங்க.. ஐபிஎல்-லுக்கு டாட்டா பைபை காட்டி அதிர வைத்த ஃபியூச்சர்40 கோடி-லாம் கொடுக்க முடியாது.. ஆளை விடுங்க.. ஐபிஎல்-லுக்கு டாட்டா பைபை காட்டி அதிர வைத்த ஃபியூச்சர்

போல்ட் பிறந்த நாள்

போல்ட் பிறந்த நாள்

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ள உசைன் போல்ட் ஜமைக்காவில் வசித்து வருகிறார். கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த அவர் ஆகஸ்ட் 21 அன்று தன் 34வது பிறந்த நாளை கொண்டாடினார்.

பிறந்தநாள் பார்ட்டியில் பிரபலங்கள்

பிறந்தநாள் பார்ட்டியில் பிரபலங்கள்

அந்த பிறந்தநாள் பார்ட்டியில் பிரபல கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த பார்ட்டியில் யாரும் முகக் கவசம் அணியவில்லை என கூறப்படுகிறது.

விமர்சனத்துக்கு உள்ளானது

விமர்சனத்துக்கு உள்ளானது

மேலும், சமூக இடைவெளியும் யாரும் பின்பற்றவில்லை. அந்த பார்ட்டி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் உசைன் போல்ட் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டார்.

பாதிப்பு உறுதி

பாதிப்பு உறுதி

அதன் முடிவில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார். இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Monday, August 24, 2020, 23:09 [IST]
Other articles published on Aug 24, 2020
English summary
Usain Bolt contracted Coronavirus after his 34th birthday party. Raheem Sterling, Chris Gayle, Leon Bailey are some of the celebrities attended the party, where no social distancing are kept and no one wears a mask.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X