For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்கை காண ஓடி வாருங்கள்... அழைக்கிறார் மின்னல் மனிதர் உசைன் போல்ட்

By Mayura Akilan

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், போட்டியை காண தங்களது குழந்தைகளுடன் பிரேசிலுக்கு வாருங்கள் எனவும், உங்களுக்கான டிக்கெட்டுகளை விரைவில் பெறுங்கள் எனவும் மின்னல் வேக ஓட்டப் பந்தைய வீரர் உசைன் போல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் அழைத்துள்ளார்.

உலக நாடுகள் அதிகம் எதிர்பாத்த ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ நகரில் கோலாகலமாக துவங்கியுள்ளது. இதில் அனைவரது பார்வையும் உலக தடகள் மன்னன் உசைன் போல்ட் பக்கம் திரும்பியுள்ளது.

பிரேசிலில் போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தாலும் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே உள்ளன. ஜிகா வைரஸ் அச்சுறுத்தல் வேறு ரசிகர்களை பிரேசில் பக்கம் வரவிடாமல் தடுத்துள்ளது.

எனவேதான தடகள வீரர் உசைன் போல்ட் ரசிகர்களே பிரேசிலுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மின்னல் வேக மனிதர் என்று வர்ணிக்கப்படும் உசைன் போல்ட், பீஜிங் (2008), லண்டன் (2012) என அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக்கிலும் 100 மீ., 200 மீ., 4 * 100 மீ., தொடர் ஓட்டம் என அனைத்திலும் தங்கம் வென்று தங்கமகனாக போற்றப்படுகிறார்.

இவர் ரியோ ஒலிம்பிக்கிலும் இப்பிரிவுகளில் தங்கம் வெல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் இடையில் ஏற்பட்ட காயம், பரம எதிரியான் அமெரிக்க வீரர் கால்டின் ஆகியோரை தாண்டி இவர் சாதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடைசி ஒலிம்பிக்

கடைசி ஒலிம்பிக்

ரியோ ஒலிம்பிக்தான் எனது கடைசி ஒலிம்பிக். 2020 ஒலிம்பிக் போட்டி வரை தொடர்ந்து தடகளத்தில் பங்கேற்பது என்பது மிகக் கடினமானது. மேலும் 4 ஆண்டுகள் எனது உத்வேகம் குறையாமல் பார்த்துக் கொள்வது என்பது இயலாத விஷயம். எனவே 2017-இல் லண்டனில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியோடு ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார் உசைன் போல்ட்

ரியோவில் தங்கம்

ரியோவில் தங்கம்

ரியோ ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்களை (100 மீ., 200 மீ., 4*100 மீ. தொடர் ஓட்டம்) வெல்ல வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய கனவு. அதைத்தான் நான் விரும்புகிறேன். அதன் மீதுதான் எனது கவனம் உள்ளது. அதுதான் எனது லட்சியமும் என்கிறார் போல்ட்.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

நான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக 200 மீ. ஓட்டத்தில் 19 விநாடிகளுக்குள் இலக்கை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துவிட வேண்டும் என்ற கனவும் எனக்குள் இருக்கிறது. எப்படியாவது 19 விநாடிகளுக்குள் இலக்கை எட்டிவிட வேண்டும்.

சாதனை படைப்பேன்

சாதனை படைப்பேன்

அந்த இலக்கை அடைய முயற்சிகளை எடுக்க விரும்புகிறேன். அதுவும் எனது லட்சியங்களில் ஒன்று. நான் மிகமிக விரும்பும் விஷயமும் அதுதான். அதுபற்றி நான் எப்போதுமே பேசி வந்திருக்கிறேன். அந்த சாதனையை படைப்பதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் உசைன் போல்ட்.

சாதனை வீரர்

சாதனை வீரர்

தனது 15வது வயதில் இரண்டு ஜீனியர் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள போல்ட், தனது 17வது வயதில் 200 மீ ஓட்டத்துக்கு 20 நிமிடங்களுக்கு குறைவாக எடுத்துக்கொண்ட முதல் வீரரானார்.

ரசிகர்களைக் காண அழைப்பு

உசைன் போல்ட் பல உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். தற்போது அவர் தனது மூன்றாவது ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைக்க ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த ஒலிம்பிக் தன்னுடைய கடைசி ஒலிம்பிக் என்று கூறும் உசைன், தனது ரசிகர்களை போட்டிகளைக் காண அழைக்கிறார்.

ஓடி வாருங்கள்

ஓடி வாருங்கள்

உசைன் போல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் தடகளப் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், போட்டியை காண தங்களது குழந்தைகளுடன் பிரேசிலுக்கு வாருங்கள் எனவும், உங்களுக்கான டிக்கெட்டுகளை விரைவில் பெறுங்கள் எனவும் அழைத்துள்ளார்.

ரசிகர்கள் வருவார்களா?... டிவியில் மட்டுமே கண்டு ரசிப்பார்களா?

Story first published: Monday, August 8, 2016, 8:35 [IST]
Other articles published on Aug 8, 2016
English summary
Jamaican golden man sends out personal message as organisers desperately try to fill seats in Brazil. The first two days of competition in Brazil have been blighted by half empty stadiums as locals have stayed away from the Games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X