For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓடுகிறார், ஓடுகிறார்.. டோணிக்கு ஒரு ரன்... உலகக் கோப்பைப் போட்டிகள் விஜய் டிவியில்.. தமிழில்!

By Mayura Akilan

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை விஜய் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் ரன்னிங் கமென்ட்ரி கேட்டு போட்டியை பார்த்து ரசிக்கலாம் என விஜய் டிவி தனது இணையதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vijay TV to telecast WC matches in Tamil

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

பிப்ரவரி 14-ஆம்தேதி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் முதல் போட்டியும், மார்ச் 29-ஆம்தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியும் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று விக்டோரியாவின் சுற்றுலா, விளையாட்டுத்துறை அமைச்சர் ஜான் எரேன் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 12-ஆம்தேதி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இதேபோல், ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னிலும் ஆடல்பாடலுடன் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற இருக்கிறது.

இந்த தொடக்கவிழாவில் உலகக்கோப்பை வீரர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகளாக இந்தி, ஆங்கிலத்தில் ரன்னிங் கமென்ட்ரி கேட்டு அலுத்துப்போன தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழில் ரன்னிங் கமென்ட்ரியுடன் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

Story first published: Friday, January 30, 2015, 15:14 [IST]
Other articles published on Jan 30, 2015
English summary
Star Group's Tamil television channel Vijay TV will be telecasting matches from the World Cup 2015 scheduled in Australia. Looks like the channel will telecast India's matches and also other important matches with the commentary in Tamil for the audience. The channel official twitter handle tweeted, "#AdraSakka! Happy to announce! Watch #ICC #Worldcup LIVE on ungal Vijay.."
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X