3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்

சென்னை : விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக ஜெர்மனியில் சிக்கி இருந்தார். அவர் தற்போது இந்தியா வர உள்ளார்.

ஜெர்மனியில் பன்டேஸ்லிகா செஸ் தொடரில் பங்கேற்க சென்ற அவர் இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அங்கேயே சிக்கினார்.

மேலும் ஜெர்மனியில் அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தியா, ஜெர்மனி இரண்டு நாடுகளிலும் விமான பயணத்திற்கு கடும் கட்டுப்பாடு இருந்தது.

அதனால், விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் தனியாக ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்தார்.

தற்போது இந்தியாவில் விமான சேவை மீண்டும் துவங்கி உள்ளது.

விஸ்வநாதன் ஆனந்த்தை சந்தித்த அந்த தருணம்.. இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அனுபவம்!

இந்த நிலையில் அவர் இந்தியா கிளம்பி வந்துள்ளார். அவர் டெல்லி வழியாக பெங்களூருவுக்கு வர உள்ளார்.

கர்நாடகாவில் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் தங்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதனால், அவர் அங்கே தங்கி, பின் 14 நாட்கள் கழித்து சென்னை வர உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Viswanathan Anand back to India after strucked in Germany for 3 months
Story first published: Saturday, May 30, 2020, 21:20 [IST]
Other articles published on May 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X