For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வருடங்களில் முதல்முறை.. இந்தியாவின் நம்பர்-1 செஸ் வீரர் மகுடத்தை இழந்தார் விஸ்வநாதன் ஆனந்த்

By Veera Kumar

சென்னை: கடந்த 30 ஆண்டுகளாக, இந்திய அளவில் நம்பர் 1 செஸ் வீரராக கம்பீர நடை போட்டு வந்த விஸ்வநாதன் ஆனந்த், தற்போது அந்த பெருமையை ஆந்திராவை சேர்ந்த ஹரி கிருஷ்ணாவிடம் நழுவவிட்டுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 4வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்ததையடுத்து, தரவரிசைப் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Viswanathan Anand loses India No 1 ranking after three decades

2763 ஈஎல்ஓ புள்ளிகளுடன், சர்வதேச தரவரிசைப் பட்டியலில், 14வது இடத்துக்கு ஆனந்த் தள்ளப்பட்டுள்ளார். 2763.3 புள்ளிகளுடன் ஆந்திராவை சேர்ந்த செஸ் வீரரான ஹரி கிருஷ்ணா, 13வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம், கடந்த 30 வருடங்களாக இந்திய அளவில் நம்பர்-1 இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்த் தற்போது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டு, ஹரி கிருஷ்ணா அந்த மகுடத்தை சூட்டியுள்ளார்.

கேண்டிடேட்ஸ் போட்டியின் அடுத்தச் சுற்றில் ஆனந்த் வெற்றி பெற்றால் அவர் மீண்டும் நம்பர்-1 இந்திய வீரராக மாற வாய்ப்புள்ளது. எனினும், அதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.

Story first published: Wednesday, March 16, 2016, 16:44 [IST]
Other articles published on Mar 16, 2016
English summary
It was a sad day for Indian fans as Viswanathan Anand lost his fourth round game at the Candidates Championships 2016, held in Moscow, against Sergey Karjakin.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X