For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெட்டிசன்களே ஏன் இப்படி?.. பிவி சிந்து, மனுஷி சில்லாரை தொடர்ந்து ஹீமா தாஸுக்கு நேர்ந்த கதி!

இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் கடந்த சில நாட்களாக கூகுளில் மிகவும் அதிக அளவில் தேடப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar

டெல்லி: இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் கடந்த சில நாட்களாக கூகுளில் மிகவும் அதிக அளவில் தேடப்பட்டு இருக்கிறார்.

பல்வேறு காரணங்களுக்காக அவர் அதிக அளவில் தேடப்பட்டுள்ளார். இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், சமீபத்தில் நடைபெற்ற உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருத்திருக்கிறார்.

மேலும் உலக ஜூனியர் தடகளப் பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கம் இதுதான். இதன் மூலம் இந்தியா முழுவதும் தங்க மங்கையாக தன்னை அடையாளம் காட்டியுள்ள ஹிமா தாஸ் பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்டது, அவரது சாதியை பற்றித்தான்.

இதே வழக்கம்

இதே வழக்கம்

ஹிமா தாஸ் வெற்றி பெற்றதே தொடர்ந்து கூகுளில் மக்கள் அதிகம் அவரது சாதி குறித்து தான் தேடியுள்ளார்கள். இது முதன் முறை அல்ல. எப்பொழுதுயெல்லாம் இந்தியாவில் இருந்து ஒரு சாம்பியன் உருவாகிறாரோ அப்பொழுது எல்லாம் மக்கள் அவர்களின் "சாதி" குறித்து தான் தெரிந்து கொள்ளதேடி இருக்கிறார்கள்.

பி வி சிந்து ஜாதி என்ன

பி வி சிந்து ஜாதி என்ன

ரியோ ஒலிம்பிக்ஸில் பேட்மிட்டன் வீராங்கனை பி வி சிந்து வெள்ளி பதக்கம் வென்ற போதும் இணையத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அவரது "சாதி மற்றும் மதம்" பற்றி தான் அதிகம் தேடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் உலகி அழகி ஆன மறுநொடி மனுஷி சில்லார் என்ன சாதி என்று தேடி உள்ளனர். இதுதான் அப்போது கூகுளில் முக்கிய இடம் பிடித்த தேடுதல் ஆகும்.

எந்த பகுதியில் தேடினார்கள்

எந்த பகுதியில் தேடினார்கள்

இதன் தொடர்ச்சியாக இப்போதும் இந்தியாவில் ஹிமா தாஸ் சாதி குறித்து தான் கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர். அதிகபட்சமாக அஸ்ஸாமிலும், அடுத்ததாக அருணாச்சல பிரதேஷ் மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் மக்களே அதிகம் தேடியுள்ளனர். இந்த செய்தி குறித்து சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபமா கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா

ஹீமாதாஸ், அசாமில் விவசாய பகுதியில் இருந்து வறுமை, பணம், கட்டுப்பாடுகளை மீறி கடைசியாக சாம்பியனான ஆனது மிகப்பெரிய எடுத்துக்காட்டு. ஆனாலும் நாம் சாதியை மறக்கவில்லை. ஹீமாவின் சாதியைத்தான் கூகுளில் எல்லோரும் தேடி இருக்கிறார்கள். வெட்கம்., என்று இவர் டிவிட் செய்துள்ளார்.

Story first published: Monday, July 16, 2018, 16:23 [IST]
Other articles published on Jul 16, 2018
English summary
Netizens proved their typical mentality once again by Googling What is Hima Das's Caste.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X