பிரபல WWE வீராங்கனை உயிரிழப்பு.. 30 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நியூ யார்க் : அமெரிக்காவை சேர்ந்த பிரபல WWE மல்யுத்த வீராங்கனை சாரா லீ காலமானார். அவருக்கு வயது 30.

பிரபல மல்யுத்த வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் நடத்திய Tough Enough என்ற மல்யுத்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கடந்த 2015ஆம் ஆண்டு பட்டத்தை சாரா லீ வென்றார்.

Tough Enough நிகழ்ச்சி என்பது மல்யுத்த வீரர்கள் ஆவதற்கான அனைத்து பயிற்சி, உடல் வலிமை, மன வலிமையை சோதிக்கும் நிகழ்ச்சி ஆகும்.

WWE JOHN CENA வின் 20 வது ஆண்டு கொண்டாட்டம்.. வரலாற்றை உருவாக்கிய சாதனை நாயகன்WWE JOHN CENA வின் 20 வது ஆண்டு கொண்டாட்டம்.. வரலாற்றை உருவாக்கிய சாதனை நாயகன்

சாரா லீ வாழ்க்கை

சாரா லீ வாழ்க்கை

இதில் வெற்றி பெற்றதை அடுத்து சாரா லீக்கு WWE ஓப்பந்தம் வழங்கப்பட்டது. சுமார் 1 ஆண்டு அதில் பணியாற்றிய சாரா லீ, அதிலிருந்து விலகி அமெரிக்காவில் நடைபெற்ற பல்வேறு மல்யுத்த போட்டியில் பங்கேற்றார். இந்த நிலையில், சாரா லீக்கு கடந்த சில ஆண்டுகளாக சைனஸ் பிரச்சினை இருந்தது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

சைனஸ் பிரச்சினையால், உடற்பயிற்சி கூட செய்ய முடியவில்லை என்று கடந்த வாரம் கூட சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். சாரா லியின் மறைவு குறித்து, அவருடைய தாயார் வெளியிட்டுள்ள பதிவில், என் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன். சாரா லீ இறைவனிடம் சேர்ந்துவிட்டதாக கூறியுள்ளார்.

தாயார் கோரிக்கை

தாயார் கோரிக்கை

சாரா உயிரிழந்த அதிர்ச்சிக்கு நடுவில், அவரை அடக்கம் செய்வதற்கான பணியில் இருப்பதாக குறிப்பிட்ட அவரது தாயார், எங்கள் துயரத்தில் நாங்கள் இருப்பதால், எங்கள் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்வதாக அவர் கூறினார். சாரா லீ தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ரசிகர்கள் அஞ்சலி

ரசிகர்கள் அஞ்சலி

சாராவுக்கு பல்வேறு ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சாராவுடன் பணியாற்றிய வீராங்கனைகள், அவர் மகிழ்ச்சியுடன் எப்போதும் இருப்பார். அவர் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
WWE Wrestler sara lee passes away and fans pays tribute
Story first published: Friday, October 7, 2022, 21:40 [IST]
Other articles published on Oct 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X