For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிளாஷ்பேக் 2020 : இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 5 விளையாட்டு வீரர்களின் மரணம்

டெல்லி : 2020இல் அதிக விளையாட்டுத் தொடர்கள் நடக்கவில்லை. அந்த சோகம் ஒருபுறம் என்றால் சில முன்னாள் விளையாட்டு வீரர்களின் மரணங்கள் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே இந்த செய்திகளும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மூன்று வெளிநாட்டு வீரர்களும் இதில் அடக்கம்.

இவரெல்லாம் ஒரு ஆளா? அந்த வீரரை பார்த்து தப்புக் கணக்கு போட்ட ஆஸி. தலையில் குட்டிய பாண்டிங்!இவரெல்லாம் ஒரு ஆளா? அந்த வீரரை பார்த்து தப்புக் கணக்கு போட்ட ஆஸி. தலையில் குட்டிய பாண்டிங்!

டீன் ஜோன்ஸ்

டீன் ஜோன்ஸ்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான டீன் ஜோன்ஸ் மும்பையில் ஐபிஎல் ஒளிபரப்பில் வர்ணனை செய்து வந்தார். அப்போது ஹோட்டல் அறையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அவரது கடைசி நிமிடங்களில் பிரெட் லீ அவரை காப்பாற்ற முயன்றது பெரிய செய்தியாக பரவியது.

சுனி கோஸ்வாமி

சுனி கோஸ்வாமி

இந்தியாவின் முதல் கால்பந்து சூப்பர் ஸ்டார் என்றால் அது சுனி கோஸ்வாமி தான். அவர் ஏப்ரல் 30 அன்று தன் 82வது வயதில் மரணம் அடைந்தார். 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு தங்கம் வென்று கொடுத்த கேப்டன் அவர்.

டியாகோ மாரடோனா

டியாகோ மாரடோனா

கால்பந்து உலகின் மாபெரும் ஜாம்பவான் டியாகோ மாரடோனா நவம்பர் 25 அன்று மரணம் அடைந்தார். தன் 60 வயதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உலகை விட்டு சென்றார். அவரைப் பார்த்தே இன்று இருக்கும் பல நட்சத்திர கால்பந்து வீரர்கள் உருவானார்கள். இந்த நிலையில், அவருக்கு ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

கோப் பிரையன்ட்

கோப் பிரையன்ட்

அமெரிக்காவின் கூடைப்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கோப பிரையன்ட். அவரும், அவரது 13 வயது மகளும் ஜனவரி 26 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தனர். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் அவரைக் குறித்த செய்திகள் பரவின.

சேத்தன் சவுகான்

சேத்தன் சவுகான்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுஹான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்தார். இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் கிரிக்கெட் வீரர் என்பதால் அவரது இறப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் உத்தர பிரதேச அரசில் அமைச்சராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 19, 2020, 8:50 [IST]
Other articles published on Dec 19, 2020
English summary
Year Ender 2020 : 5 top Sports persons death in 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X