20 வயது பையனிடம் சரணடைந்த ஃபெடரர்.. நம்ப முடியாத தோல்வி - சோறு வடிப்பதற்குள் முடிந்த போட்டி

ஜெர்மனியின் ஹாலேவில் நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில், எதிராளியே எதிர்பார்க்காத வகையில். ரோஜர் பெடரர் தோல்வி அடைந்திருக்கிறார்.

உலகையே தங்கள் அபார விளையாட்டின் மூலம் கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் தற்போது தடுமாறும் சீசன் போல. அதில் மிக முக்கியமானவர் ரோஜர் பெடரர்.

"டமால் டுமீல்".. WTC ஃபைனல் போட்டியில் காட்டுச் சத்தம்.. மிரட்டும் இடி மின்னல் - மேட்சுக்கு ஆப்பு?

இவர் வெல்லாத பட்டங்களா? ஏந்தாத கோப்பைகளா? ஆனால், இப்போதெல்லாம் பெடரரால், இறுதிப் போட்டி வரை முன்னேறுவதே கனவாகிவிட்டது. அந்தளவுக்கு திணறுகிறார்.

ரோஜர் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர்

ஜெர்மனியில் Halle ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஜூன்.16) நடந்த காலிறுதிப் போட்டியில் உலகின் முன்னாள் நம்பர்.1 வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், 20 வயதான கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியஸ்சிம் (Felix Auger-Aliassime) எனும் வீரரும் மோதினர்.

ஒன்னேமுக்கால் மணி நேரம்

ஒன்னேமுக்கால் மணி நேரம்

அனுபவம் இல்லாத 20 வயதான இளம் வீரர் என்பதால், பெடரர் சிறிது நேரத்தில் ஆட்டத்தை முடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது என்னவோ அப்படியே ரிவர்ஸாக. ஹாலேவில் 10 முறை சாம்பியன் கோப்பை வென்றிருக்கும் பெடரர், தன்னை விட 19 வயது இளமையான பெலிக்ஸிடம் வெறும் 1 மணி நேரம் 45 நிமிடங்களில் சரண்டரானார்.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

பெடரரை 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பெலிக்ஸ் தோற்கடித்தார். வருகிற 28ம் தேதி தொடங்கும் விம்பிள்டன் போட்டிக்கு தயாராகி வரும் பெடரருக்கு இந்த தோல்வி பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பெலிக்ஸ் செர்வ்கள் அனைத்தும் நம்பமுடியாத வகையில் இருந்தது. அவற்றை சமாளிக்க பெடரர் மிகவும் சிரமப்பட்டார்.

ரசிகர்கள் வேதனை

ரசிகர்கள் வேதனை

பெடரரின் இந்த தோல்வி அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. அவரால், முன்பு போல் விளையாட முடியவில்லையோ என்ற சந்தேகம், இந்த தோல்விக்கு பிறகு கடுமையாக எழுந்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் பெடரருக்கும், பெலிக்ஸுக்கும் ஒரே தேதியில் தான் பிறந்தநாள். ஆகஸ்ட் 8. தோனி இப்போது சிக்ஸர்கள் அடிக்க முடியாமல் திணறுவதைப் போன்று, பெடரர் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறுவதை பார்க்கும் போது வேதனையாக இருப்பதாக ரசிகர்கள் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
20-year-old Felix beats Roger Federer Halle - ரோஜர் பெடரர்
Story first published: Thursday, June 17, 2021, 11:05 [IST]
Other articles published on Jun 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X