20வது பட்டம் வென்று சொந்த சாதனையை முறியடித்தார் பெடரர்!

Posted By: Staff

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபனில் வென்றதன் மூலம் தனது 20வது பட்டத்தை வென்று, அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற தன்னுடைய சாதனையை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மீண்டும் முறியடித்தார்.

ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன், பிரெஞ்ச் ஓபன் ஆகிய நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆண்டில் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டம் வென்றார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்.

20th title for Federer

நேற்று நடந்த பைனலில் மரின் சிலிச்சை 6-2, 6-7. 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் வென்றார் பெடரர். இதன் மூலம் 6வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அவர் வென்றுள்ளார். அதிக முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற நோவாக் ஜோகோவிச்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இதையும் சேர்த்து, 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ரோஜர் பெடரர் வென்றுள்ளார். நடுவில் 5 ஆண்டுகள் எந்த பட்டமும் வெல்லாத அவர், கடந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.

ஆடவர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்றவர் என்ற பெருமையை தொடர்ந்து பெடரர் தக்க வைத்துள்ளார். ஸ்பெயினின் ரபேல் நடால், 16 பட்டங்களை வென்றுள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில், மகளிர் பிரிவில் மார்க்கரெட் கோர்ட் 24 பட்டங்களும், செரீனா வில்லியம்ஸ் 23, ஸ்டெபி கிராப் 22 பட்டங்களையும் வென்றுள்ளனர். ஆடவர் பிரிவில் 20வது பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற பெருமை, 36 வயதாகும் பெடரருக்கு கிடைத்துள்ளது.


Story first published: Monday, January 29, 2018, 11:12 [IST]
Other articles published on Jan 29, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற