For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிராண்ட்ஸ்லாம் ரூல்ஸை மாத்துங்க.....நீண்ட நேரம் ஆடி சோர்ந்து போன ஆண்டர்சன் - இஸ்னர் கோரிக்கை!

By Aravinthan R

விம்பிள்டன்: விம்பிள்டன் அரையிறுதியின் நீளமான போட்டியில் சுமார் ஆறரை மணி நேரம் போராடிய ஆண்டர்சன் மற்றும் இஸ்னர், இருவரும் கிராண்ட்ஸ்லாம் ரூல்ஸை மாற்றி போட்டிகள் அதிக நேரம் செல்வதை தவிர்க்க வேண்டும் என கோரியுள்ளனர்.

நேற்று நடந்த முதல் விம்பிள்டன் அரையிறுதி போட்டியில் கெவின் ஆண்டர்சன், ஜான் இஸ்னர் மோதினர். ஆறு மணி நேரம் முப்பத்தியாறு நிமிடங்கள் நடந்த போட்டியில் ஆண்டர்சன் வெற்றி பெற்றார். வெற்றிக்கு பின் பேசிய ஆண்டர்சன், “இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் மாற்றம் காண வேண்டியதற்கான அறிகுறி என நம்புகிறேன். இதை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், இறுதியில் நீங்கள் நன்றாக உணரமாட்டீர்கள்” என்று கூறினார்.

change the wimbledon rules for fifth set decider asks isner and anderson


அடுத்து பேசிய ஜான் இஸ்னர், “கெவின் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் கருதுவது, ஐந்தாவது செட் “12 ஆல்” என்ற புள்ளிகளுக்கு பின்பு டை-பிரேக்கருக்கு ஆட்டம் செல்வதுதான் ஒரு புத்திசாலித்தனமான திட்டமாக இருக்கும்.” என்று கூறினார்.

ஐந்தாவது செட்டின் இடையில், இஸ்னர் நடுவரிடம் டை-ப்ரேக்கர் விளையாடலாமா? என கேட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கான, விதிகள் இல்லை என்று தெரிந்தும் ஏதாவது நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் இஸ்னர் இதை கேட்டுள்ளார்.

ரசிகர்களுக்கும் இந்த நீண்ட நேர ஆட்டம் சுவாரஸ்யத்தை அளிக்கவில்லை என்பது ஆட்டத்தின் நடுவே அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் மூலம் அறிய முடிகிறது. ஒரு ரசிகர் ஆட்டத்தின் நடுவே கூச்சலிட்டு, “இன்னொரு 70-68 எங்களுக்கு வேண்டாம்” என ஜான் இஸ்னர் இதற்கு முன்பு ஆடிய 11 மணி நேர ஆட்டத்தை குறிப்பிட்டு கூறினார்.

மற்றொருவர், “சீக்கிரம் மாற்றுங்கள். நாங்கள் ரபேல் விளையாடுவதை பார்க்க வேண்டும்” என அடுத்த அரையிறுதியில் நடால் ஆடும் ஆட்டத்தை துவங்கும் படி கூச்சலிட்டார். மற்றொரு குறும்பு ரசிகர் இந்த ஆட்டம் நடந்து கொண்டு இருந்தபோது ட்விட்டரில், “இது மே மாதம், 2039ஆம் வருடம். ஜோகோவிக் இப்போதுதான் தான் தாத்தா ஆகிவிட்டதை அறிவித்தார். பெடரர் பைன்ஆப்பிள் பிஸ்ஸா கடைகளை துவங்கியுள்ளார். ஆண்டி முர்ரே MP தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும், இஸ்னர் ஆண்டர்சனை விட ஒரு புள்ளி அதிகம் பெற்று 5588-5587 என்ற முன்னிலையில் இருக்கிறார்” என கேலி செய்திருந்தார்.

இந்த போட்டியை அடுத்து, பலரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் ஐந்தாவது செட்டில் டை-பிரேக்கர் முறையை கொண்டு வர வேண்டும் என தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். நீண்ட நேர ஆட்டங்கள் வீரர்களுக்கு இரக்கமற்ற தண்டனை என்ற நிலையை எட்டியுள்ள நிலையில், கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஐந்தாவது செட்டை டை-பிரேக்கர் மூலம் நிர்ணயிப்பதே நியாயமாக இருக்கும்.





Story first published: Saturday, July 14, 2018, 15:31 [IST]
Other articles published on Jul 14, 2018
English summary
After the hectic 6.5 hours semi-final match, Isner and Anderson asks for rule change for the Grandslam.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X