யுஎஸ் ஓபன் 2020 : பரபரப்பான இறுதிப்போட்டி... டொமினிக் தீம் முதல் கிராண்ட் ஸ்லாம் வெற்றி

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற யுஎஸ் ஓபன் 2020 தொடரின் ஆடவர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் வெற்றி பெற்று தன்னுடைய முதல் கிராண்ட் ஸ்லாம் வெற்றியை பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை வீழ்த்தி, யுஎஸ் ஓபன் ஆடவர் தனிநபர் கோப்பையை அவர் கைகொண்டுள்ளார்.

இந்த போட்டியை பெடரர் மற்றும் நடப்பு சாம்பியன் நடால் ஆகியோர் தவிர்த்துள்ள நிலையில், லைன் நடுவரை தாக்கிய விவகாரத்தில் டிஜோகோவிச்சும் இடையிலேயே தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

3 ரன்னில் 4 விக்கெட்.. செம ட்விஸ்ட்.. இங்கிலாந்து கேப்டனின் மாஸ்டர்பிளான்.. ஆஸி. மோசமான தோல்வி!

காலி மைதானங்களில் போட்டி

காலி மைதானங்களில் போட்டி

கடந்த சில தினங்களாக நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பெலாரசை சேர்ந்த விக்டோரியா அஸரெங்காவை 3 செட்களில் போட்டியிட்டு தோற்கடித்தார்.

டொமினிக் தீம் வெற்றி

டொமினிக் தீம் வெற்றி

இந்நிலையில் ஆடவர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், அதில் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் டொமினிக் தீம் மற்றும் ஜெர்மனை சேர்ந்த டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெப் ஆகியோர் மோதினர். இந்நிலையில் அலெக்சாண்டரை வீழ்த்தி டொமினிக் தீம் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

ஆதிக்கம் செலுத்திய டொமினிக்

ஆதிக்கம் செலுத்திய டொமினிக்

4 மணிநேரங்கள் மற்றும் 2 நிமிடங்கள் நீடித்த இந்த இறுதிப்போட்டியில் 2க்கு 6, 4க்கு 6, 6க்கு 4, 6க்கு 3 மற்றும் 7க்கு 6 என்ற செட் கணக்குகளில் அலெக்சாண்டரை டொமினிக் தோற்கடித்துள்ளார். ஆரம்பத்தில் 2 சுற்றுகள் அலெக்சாண்டருக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்த நிலையில் அடுத்த செட்களில் டொமினிக் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி தன்னுடைய முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

இடையில் வெளியேறிய ஜோகோவிச்

இடையில் வெளியேறிய ஜோகோவிச்

கொரோனா காரணமாக இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் இடம்பெறாத நிலையில், தொடரில் பங்கேற்று சிறப்பாக ஆடிவந்த நவோக் ஜோகோவிச்சும் போட்டி ஒன்றில் லைன் நடுவரை தாக்கிய விவகாரத்தில் தொடரிலிருந்து இடையிலேயே விலக்கப்பட்டார்.

தீவிரமாக விளையாடிய வீரர்கள்

தீவிரமாக விளையாடிய வீரர்கள்

இறுதிப்போட்டியில் மோதிய இரு வீரர்களும் கோப்பையை கைப்பற்ற மிகவும் மும்முரமாக முயற்சிகளை மேற்கொண்டநிலையில், யுஎஸ் ஓபன் தொடரில் இல்லாத வகையில் முதல் இரண்டு செட்களை இழந்த ஒரு வீரர், கோப்பையை கைப்பற்றியது இதுதான் முதல் முறை. இதேபோல, யுஎஸ் தொடரின் இறுதிப்போட்டியில் டை பிரேக் ஏற்பட்டதும் இதுதான் முதல்முறை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dominic Thiem beat Alexander Zverev to win US Open men's singles title
Story first published: Monday, September 14, 2020, 11:34 [IST]
Other articles published on Sep 14, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X