வரலாற்றில் முதன் முறை.. விம்பிள்டன் ஆண்கள் ஃபைனலில்.. ஒரு "சிங்கப் பெண்" நடுவராக

லண்டன்: உலக புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னின்ஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரும் நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6, 7-5, 7-5 என்ற கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 20வது முறை பட்டம்

20வது முறை பட்டம்

செர்பியாவை சேர்ந்த வீரரான ஜோகோவிச் நுழையும் 30வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி இதுவாகும். இதுவரை 19 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச், இந்த முறையும் வெற்றி பெற்று 20வது முறையாக மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இறுதிப் போட்டிக்கு என்ட்ரி

இறுதிப் போட்டிக்கு என்ட்ரி

மற்றொரு அரையிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, போலந்தின் ஹூபர்ட் ஹர்காசை ஆகியோர் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹூபர்ட், 6-3, 6-0, 6-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

 4 கிராண்ட்ஸ்லாம்

4 கிராண்ட்ஸ்லாம்

நாளை (ஜுலை 11) நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதுகின்றனர். நடப்பாண்டில் ஆஸ்திரேலிய, பிரெஞ்ச் ஓபன் தொடர் என ஏற்கனவே பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தற்போது விம்பிள்டன் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். அடுத்து வரும் யுஎஸ் ஓபன் தொடரிலும் பட்டம் வென்றுவிட்டால் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெறுவார்.

 ஒரு பெண் நடுவர்

ஒரு பெண் நடுவர்

இந்நிலையில், 1877ல் இருந்து நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில், வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு ஒரு பெண் நடுவராக பணிபுரிய உள்ளார். நாளைய இறுதிப் போட்டியில் குரோஷியாவைச் சேர்ந்த 43 வயதான மரிஜா சிகாக் அதிகாரப்பூர்வமாக செயல்படுவார் என்று

கிளப் அறிவித்துள்ளது. அவர் ஒரு gold badge chair நடுவர் என்பதும் 2012 முதல் WTA எலைட் அணியின் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சிகாக் 2014 விம்பிள்டன் பெண்கள் இறுதிப் போட்டியின் நடுவராகவும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியின் நடுவராகவும் இருந்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
First female chair umpire in Wimbledon men’s final since 1877 First female umpire in Wimbledon men’s final - விம்பிள்டன்
Story first published: Saturday, July 10, 2021, 20:49 [IST]
Other articles published on Jul 10, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X