யார்யா இவன்? இப்படி காட்டுத்தனமா அடிக்கிறான்? - ஜோகோவிச்சை மூச்சு வாங்க வைத்த "அசுரன்"

வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ஜோகோவிச்சை சுழன்று அடித்த மெட்வதேவ் குறித்து இங்கே பார்க்கலாம்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் மற்றும் நோவக் ஜோகோவிச் மோதினர்.

ஐபிஎல்: டூப்ளசிஸ் முதல் சாம் கரண் வரை இல்லை? சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்.. எப்படி சமாளிப்பார் தோனி? ஐபிஎல்: டூப்ளசிஸ் முதல் சாம் கரண் வரை இல்லை? சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்.. எப்படி சமாளிப்பார் தோனி?

இதில், தொடக்கம் முதலேயே அதிரடி காட்டிய மெட்வதேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சீறிப் பாய்ந்த செர்வ்ஸ்

சீறிப் பாய்ந்த செர்வ்ஸ்

அதுமட்டுமின்றி, இந்த வருடம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில், தொடர்ச்சியாக வெற்றிப் பெற்று வந்த ஜோகோவிச் பயணத்துக்கும் மெட்வதேவ் முடிவுரை எழுதியுள்ளார். மெட்வதேவ்வின் இந்த வெற்றி அவ்வளவு சாதாரணமாக அமைந்துவிடவில்லை. தன்னை ஒரு முழுமையான போர் வீரனாக உருமாற்றி, போர் செய்யப் பழகி இந்த போட்டியில் களமிறங்கி இருக்கிறார் என்பதை, அவரது ஆட்டத்தை லைவாக பார்த்தவர்களால் உணர முடியும். அவரது செர்வ்கள் அனைத்தும் புல்லட்கள் போல் சீறிப் பாய்ந்தன.

மணிக்கு 200 கி.மீ வேகம்

மணிக்கு 200 கி.மீ வேகம்

மெட்வதேவ் ஆட்டம் குறித்து டென்னிஸ் ரசிகர்கள் பொதுவாக, "அவர் ஒரு unorthodox டென்னிஸ் வீரர்" என்று கூறுவார்கள். ஆனால், இறுதிப் போட்டியில் அவரது ஆட்டத்தில் அத்தனை நேர்த்தி, தெளிவு, வியூகம் இருந்தது. 6'6 அடி உயரம் கொண்ட மெட்வதேவ் முட்டியை மெலிதாக மடக்கி, கைகளை உயர்த்தி அடித்த முதல் செர்வின் ஆவரேஜ் வேகம் மணிக்கு 196 கி.மீ. இத்தனை வேகத்தில் சென்ற அவரது செர்வ் லேண்ட் ஆன இடம் சபாஷ் போட வைத்தது. இந்த placement-ல் தான் ஜோகோவிச் திணறினார். பிறகு, அவரது செர்வ்கள் அனைத்தும் மணிக்கு 200 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் பறந்தது.

இல்லனா காலி

இல்லனா காலி

போட்டி முடிந்த பிறகு பேசிய ஜோகோவிச், "அவர் தனது ஸ்பாட்களை மிக அற்புதமாக குறிவைத்து ஆடினார்" என்றார். இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் மெட்வதேவ் செர்வ்-களுக்கு. அதுமட்டுல்ல, தொடர்ந்து பேசிய ஜோகோவிச், "மெட்வதேவ் போன்ற ஒருவரை எதிர்த்து நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றால், அவர் தனது அபார செர்வ்களின் மூலம் ஃப்ரீ பாயிண்ட்ஸ் பெற ஆரம்பித்துவிடுவார். அப்போதே நீங்கள் ஆட்டத்தின் பிரஷரை உணர ஆரம்பித்துவிடுவீர்கள்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மீண்டும் தோல்வி

மீண்டும் தோல்வி

மெட்வதேவ் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்து வெற்றிப் பெற்றதற்கான காரணம் அவரது deep returning position தான். ஒரு உயரமான, மெலிந்த, அதிக எடை இல்லாத மெட்வெதேவ்வின் பக்கவாட்டு இயக்கம் சிறப்பாக இருந்தது. அவரது மூவ்மெண்ட்டும், அபாரமான செர்வ்களும் அவரை ஒரு மிருகத்தனமான எதிராளியாக மாற்றியது. இந்த யுஎஸ் ஓபனில், மெட்வதேவ் 39 சதவிகிதம் defensive situations-ல் இருந்து தான் அதிக புள்ளிகளை பெற்றுள்ளார். அதேசமயம், ஜோகோவிச் இந்த இறுதிப் போட்டியில் அதிக தவறுகள் செய்ததும், மெட்வதேவ் வெற்றியை எளிதாக்கியது என்பதை மறக்க முடியாது. ஒலிம்பிக் தோல்விக்கு பிறகு, ஜோகோவிச் சந்திக்கும் மிக முக்கிய தோல்வி, இந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி தான்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
How Medvedev beat Djokovic US Open 2021 final? - மெட்வதேவ்
Story first published: Monday, September 13, 2021, 11:42 [IST]
Other articles published on Sep 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X