For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கும் ஜெனிபர் பிராடி... பெருமை கொள்வதாக உற்சாகம்

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க்கில் துவங்கி நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகாவிடம் ஜெனிபர் பிராடி தோல்வியடைந்துள்ளார்.

முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிப்போட்டியில் பங்கேற்ற ஜெனிபர் பிராடி தோல்வியடைந்தாலும் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கின் ஆர்தர் ஆஷே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஒசாகாவை எதிர்கொண்ட பிராடி, 7க்கு 6, 3க்கு 6 மற்றும் 6க்கு 3 என்ற செட் கணக்கில் தோல்வியை கண்டுள்ளார்.

ஓ காட்.. 3 கூடைப்பந்து வீரர்களுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் அமெரிக்கா! ஓ காட்.. 3 கூடைப்பந்து வீரர்களுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் அமெரிக்கா!

அரையிறுதியில் தோற்ற பிராடி

அரையிறுதியில் தோற்ற பிராடி

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. நாளை இந்த தொடரின் மகளிர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் விக்டோரியா அஸரெங்கா மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர் மோதவுள்ளனர். முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி, ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகாவிடம் தோற்றார்.

பெருமை கொள்வதாக பேட்டி

பெருமை கொள்வதாக பேட்டி

தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிப்போட்டியில் ஒசாகாவை எதிர்கொண்ட பிராடி, 7க்கு 6, 3க்கு 6 மற்றும் 6க்கு 3 என்ற செட் கணக்குகளில் தோல்வியை கண்டுள்ளார். ஆயினும் தான் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்ததாகவும் அது தனக்கு பெருமையையே தருவதாகவும் பிராடி குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான ஆளுமை

சிறப்பான ஆளுமை

ஒவ்வொரு போட்டியையும் தான் ஒரேவிதமான மனநிலையுடனே எதிர்கொள்வதாகவும் ஒவ்வொரு நிலையிலும் போட்டியிட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள பிராடி, இந்த அரையிறுதிப் போட்டியிலும் தான் அதையே தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார். அரையிறுதிப்போட்டியின் ஒவ்வொரு சூழலையும் தான் சிறப்பாக கையாண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையுடன் விளையாட்டு

நம்பிக்கையுடன் விளையாட்டு

போட்டியின்போது தான் சிறிது பதட்டப்பட்டதாகவும் போட்டியில் தான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் வெற்றி பெறவில்லை என்றாலும் கடந்த வாரங்களில் தான் மேற்கொண்ட முயற்சி, தன்னுடைய மனவலிமை உள்ளிட்டவை தன்னை பெருமை கொள்ள செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Friday, September 11, 2020, 17:09 [IST]
Other articles published on Sep 11, 2020
English summary
I felt like I went out there and I believed that I could win the match -Brady
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X