For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

16வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற பயஸ்... ஹிங்கிஸுடன் இணைந்து 2வது பட்டம்

லண்டன்: இந்தியாவின் லியாண்டர் பயஸ் தனது 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் அவரும், மார்ட்டினா ஹிங்கிஸும் இணைந்து பட்டத்தை வென்றதன் மூலம் பயஸ் இந்த சாதனையைப் படைத்தார்.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில், அலெக்சாண்டர் பெயா மற்றும் டிமியா பபோஸ் ஜோடியை பயஸ் - ஹிங்கிஸ் ஜோடி 6-1, 6-1 என்ற நேர் செட்களில் அதிரடியாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

வெறும் 40 நிமிடத்தில் இந்தப் போட்டி முடிவடைந்தது. இந்தியா ஜோடியின் புயல் வேக ஆட்டத்தை சமாளிக்க முடியாமல், எதிர்த்தரப்பு சரிந்து போனது. ஒரு செட்டில் கூட பெயா ஜோடி ஆதிக்கம் செலுத்தவில்லை.

பயஸுக்கு 8வது பட்டம்

பயஸுக்கு 8வது பட்டம்

இந்த வெற்றியானது பயஸுக்கு 8வது கலப்பு இரட்டையர் பட்டமாகும். அதேசமயம், ஹிங்கிஸுக்கு இது 2வது பட்டமாகும். இருவரும் இணைந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 16

மொத்தம் 16

42 வயதான பயஸ்,ஏற்கனவே 8 ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஆதிக்கம்

இந்தியாவின் ஆதிக்கம்

இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிகள் இந்தியாவுவுக்கு மிகவும் ராசியானதாக மாறியுள்ளது. மகளிர் இரட்டையர் பட்டம், கலப்பு இரட்டையர் பட்டம் மற்றும் இளையோருக்கான ஆடவர் ஜூனியர் இரட்டையர் பட்டம் ஆகியவற்றில் இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

2 நாளில் 2 பட்டம்

2 நாளில் 2 பட்டம்

ஹிங்கிஸைப் பொறுத்தவரை இது 2 நாட்களில் அவருக்குக் கிடைத்த 2வது பட்டமாகும். முதலில் அவர் சானியா மிர்ஸாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றார். தற்போது பயஸுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பட்டத்தைப் பெற்றார்.

ஹிங்கிஸுக்கு 18

ஹிங்கிஸுக்கு 18

ஹிங்கிஸுக்கு இது ஒட்டுமொத்தமாக 18வது கிராண்ட்ஸ்லாம் ஆகும். கலப்பு இரட்டையரில் இது 3வது பட்டமாகும். இதில் பயஸுடன் இணைந்து அவர் 2 பட்டங்களை வென்றுள்ளார்.

Story first published: Monday, July 13, 2015, 15:18 [IST]
Other articles published on Jul 13, 2015
English summary
A vintage Leander Paes clinched his 16th Grand Slam trophy, winning the mixed doubles event of the Wimbledon Championships with legendary Martina Hingis after a dominating win over Alexander Peya and Timea Babos on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X