ஒரு ஜீரோவை சேர்க்க மறந்துட்டேன்.. பயஸை டென்ஷனாக்கும் ரியா!

Posted By: Staff

மும்பை: மறதி தந்தை' லியாண்டர் பயஸ் மீது இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கில், ஒரு ஜீரோவை சேர்க்க மறந்துவிட்டதாக, அவருடைய லிவ்-இன் பார்ட்டனரான முன்னாள் மாடல் அழகி ரியா பிள்ளை கோர்ட்டில் கூறியுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், மாடல் அழகியான ரியா பிள்ளையுடன், 2005 முதல் லிவ் இன் பார்ட்டனராக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

தன்னை வீட்டை விட்டு வெளியேற்றதுடன், மகளை மறந்து விட்டதாக பயஸ் மீது, ரியா பிள்ளை மும்பை கோர்ட்டில், 2014ல் வழக்கு தொடர்ந்தார். சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தலையிட்டு, இந்த வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்று கூறியது.

ரியா பிள்ளை

ரியா பிள்ளை

வழக்கும் மும்பை கோர்ட்டில் நடந்து வருகிறது. குழந்தையின் பராமரிப்புக்காக ஏற்கனவே செலவிட்ட ரூ. 42.37 லட்சம் ரூபாய், குழந்தையின் பராமரிப்புக்காக மாதத்துக்கு ரூ.2.62 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ரியா பிள்ளை கேட்டிருந்தார்.

செட்டில்மென்ட்

செட்டில்மென்ட்

இதைத் தவிர, ஒருமுறை செட்டில்மென்ட் தொகையாக, ரூ.10 லட்சம் கேட்டிருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ரியா பிள்ளை புதிய மனு தாக்கல் செய்தார்.

ஜீரோ மறந்து போச்சு

ஜீரோ மறந்து போச்சு

தனது செட்டில்மென்ட் தொகையில், ஒரு ஜீரோவை சேர்க்க மறந்துவிட்டேன். எனக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்று கோர்ட்டில் ரியா பிள்ளை கூறியுள்ளார்.

மறதி தந்தை

மறதி தந்தை

குழந்தை இருப்பதையே மறந்து விட்ட, மறதி தந்தை என்று பயஸை குறிப்பிட்டிருந்த ரியா பிள்ளை, ஒரு ஜீரோவை மறந்ததாகக் கூறியுள்ளது, பயஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, September 13, 2017, 18:58 [IST]
Other articles published on Sep 13, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற