For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னாது விளையாட வேணாமா... திடீர்னு சொன்னா எப்படி... மீறி விளையாடிய பிவி சிந்து...

டெல்லி : இந்திய அரசின் விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளையும் மீறி அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் முடிவை பிவி சிந்து எடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகெங்கிலும் 9,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பீதி காரணமாக கடந்த 11ம் தேதி இரவு இந்திய அரசு பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 15ம் தேதிவரை அனைத்து விசாக்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த பிவி சிந்து, லக்ஷயா சென், சிக்கி ரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் அதை தொடர முடிவு செய்து ஆடியுள்ளனர். தற்போது நாடு திரும்பியுள்ள இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முதல், 2வது சுற்று

முதல், 2வது சுற்று

கொரோனாவை மீறி இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த சாய்னா நேவால், காஷ்யாப், சாய் பிரனிதி ஆகியோர் முதல் சுற்றிலேயே ஆட்டமிழந்தனர். இந்நிலையில் இரண்டாவது சுற்றில் பிவி சிந்து, லக்ஷயா மற்றும் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் விளையாடினர்.

ஆட்டத்தை தொடர்ந்த பிவி சிந்து

ஆட்டத்தை தொடர்ந்த பிவி சிந்து

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இந்திய அரசு கடந்த 11ம் தேதி இரவு விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து, இங்கிலாந்தில் இருந்த பிவி சிந்து உள்ளிட்டோரிடம் ஆட்டத்தை பாதியில் முடித்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அங்கேயே இருந்ததால், சில தினங்கள் தொடர்ந்து ஆடுவதில் தவறில்லை என்று கூறிய வீராங்கனைகள் ஆட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் குற்றச்சாட்டு

விளையாட்டு வீரர்கள் குற்றச்சாட்டு

ஆயினும் கொரோனா வைரஸ் பீதி சர்வதேச அளவில் குறிப்பாக இங்கிலாந்திலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தொடரை தொடர்ந்து உலக பேட்மின்டன் பெடரேஷன் நடத்தியது குறித்து சாய்னா நேவால், காஷ்யாப், அஸ்வினி ஆகியோர் மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். வீரர்களின் பாதுகாப்புடன் பெடரேஷன் விளையாடியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

2வது சுற்றில் லக்ஷயா அவுட்

2வது சுற்றில் லக்ஷயா அவுட்

கொரோனாவையும் மீறி இந்த தொடரில் காலிறுதி வரை முன்னேறிய பிவி சிந்து ஜப்பானை சேர்ந்த நோசோமி ஒகுஹாராவிடம் தோற்று வெளியேறினார். இதனிடையே, லக்ஷயா தன்னை எதிர்த்து போட்டியிட்ட டென்மார்க்கை சேர்ந்த விக்டர் அக்செல்சனிடம் தோற்று பின்வாங்கினார்.

மாஸ்குடனேயே திரிந்த வீரர்கள்

மாஸ்குடனேயே திரிந்த வீரர்கள்

இங்கிலாந்தில் யாரும் மாஸ்க்குடன் இல்லாதநிலையிலும், இந்திய வீரர்கள் ஹோட்டல், விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் மாஸ்குடனேயே திரிந்ததாகவும், சாப்பிடும் நேரத்தில் மட்டுமே மாஸ்குகளை விலக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

14 நாட்கள் தனிமை

14 நாட்கள் தனிமை

இதனிடையே, தற்போது இந்தியா திரும்பியுள்ள ரமணா, சிந்து உள்ளிட்டோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாரையும் சந்திக்க இவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே, தன்னுடைய ஹோட்டல் அறையை ஒட்டி சில பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்ள சிந்துவிற்கு ஆலோசனை வழங்கவுள்ளதாக ரமணா தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, March 20, 2020, 14:04 [IST]
Other articles published on Mar 20, 2020
English summary
PV Sindhu decided to play on at All England Championships despite coronavirus
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X