46 ஆண்டுகால சாதனை முறியடிப்பு.. வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்.. விம்பிள்டனில் சரித்திரம் படைத்த ஃபெடரர்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் முன்னணி வீரர் ரோஜர் பெடரர்.

உலக புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில், நடைபெற்று வருகிறது.

கடின உழைப்புக்கு கிடைத்த பலன்.. சாதனை படைக்க ஒலிம்பிக் செல்லும் தமிழக வீராங்கனை.. குவியும் பாராட்டு!கடின உழைப்புக்கு கிடைத்த பலன்.. சாதனை படைக்க ஒலிம்பிக் செல்லும் தமிழக வீராங்கனை.. குவியும் பாராட்டு!

இதில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த மூன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

காலிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதிக்கு முன்னேற்றம்

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை எதிர்த்து ரோஜர் பெடரர் போட்டி போட்டார். இதில் முதல் சுற்றில் சற்று சிரமப்பட்டு விளையாடிய ரோஜர், பின்னர் 2வது மற்றும் 3வது செட்களில் சிறப்பாக விளையாடினார். அவர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லாரன்சோ சொனாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.

புதிய சாதனை

புதிய சாதனை

தற்போது 39 வயதாகும் ரோஜர் ஃபெடரர் இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் தொடரில் 18 வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். விம்பிள்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய அதிக வயதுகொண்ட வீரர் என்ற பெருமையையும் ரோஜர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 1974ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டனில் கென் ரோஸ்வால் (39 வருடம், 244 நாட்களான) காலிறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஃபெடரர் (30 வருடம், 337) வயதில் நுழைந்துள்ளார்.

சாதனைகள்

சாதனைகள்

40 வயதை நெருங்கிவிட்ட ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தவர் ஆவார். காயத்தால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது மீண்டும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று ஆடிவருகிறார். இதுமட்டுமல்லாமல் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே 2008 ஒலிம்பிக் போட்டிகளில் வாவ்ரிங்காவுடன் இணைந்து இரட்டையரில் தங்கம் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோவக் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச்

இதே போல நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் உலகின் நம்பர். 1 வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் சிலியின் கிறிஸ்டியன் கேரின் மோதினார்கள். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் தன்னை எதிர்த்து ஆடிய கிறிஸ்டியன் கேரினை 6-2,6-4, 6-2 என்னும் செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் ஜோகோவிச்-ம் காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Roger Federer Entered into Wimbledon Quater Finals, Downs sonego to become oldest Wimbledon Quarterfinalist on open era
Story first published: Tuesday, July 6, 2021, 14:15 [IST]
Other articles published on Jul 6, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X