For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னும் ஓயாத சானியா மேனியா... 30 லட்சம் பேர் லைக்...!

சென்னை: சானியா மிர்ஸா.. ஒரு காலத்தில் டென்னிஸ் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் வசீகரித்த பெயர்.

திருமணமாவதற்கு முன்பு வரை சானியா மிர்ஸா குறித்த செய்திள் இடம் பெறாத நாளே இல்லை என்றும் கூறும் அளவுக்கு லைம்லைட்டில் இருந்தவர்.

இவரது திருமணமே பெரும் சர்ச்சைக்கு மத்தியில்தான் நடந்தேறியது. அதன் பின்னர் மிர்ஸா அலை ஓய்ந்து விட்டதாகவே தெரிந்தது. ஆனாலும் இவரது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்தோர் எண்ணிக்கை தற்போது 30 லட்சத்தை தொட்டுள்ளது.

இந்த செய்தியை சானியாவே மகிழ்ச்சி பொங்க தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதிலிருந்து

ஹைதராபாதிலிருந்து

ஹைதராபாத்திலிருந்து இந்தியா முழுவதும் அலை பரப்பிய பெருமைக்குரியவர் சானியா.

அழகும், ஆட்டமும்

அழகும், ஆட்டமும்

சானியா மிர்ஸாவின் ஆட்டத்தைப் போலவே அவரது அழகும் பேசப்பட்டது. பொதுவாகவே டென்னிஸ் வீராங்கனைகளின் ஆட்டத்தோடு அவர்களது அழகும்தான் பெருமளவில் பேசப்படும். அதற்கு விதி விலக்கில்லாதவராக சானியாவும் விளங்கினார்.

படு வேகமாக புகழுச்சியில்

படு வேகமாக புகழுச்சியில்

படு வேகமாக புகழ் உச்சியில் ஏறியவர் சானியா. அவரது அழகு மட்டும் இதற்குக் காரணமல்ல, அருமையான ஆட்டமும் கூடத்தான்.

பல முதல்களுக்குச் சொந்தக்காரர்

பல முதல்களுக்குச் சொந்தக்காரர்

சானியா மிர்ஸா பல முதல்களுக்குச் சொந்தக்காரர். அதாவது மிகவும் இளம் வயதில் மகளிர் டெண்னிஸ் சங்க போட்டிகளில் அறிமுகமானவர் சானியாதான். 2003ல் அது நடந்தது.

விம்பிள்டனில் பட்டம் வென்ற இளம் இந்தியர்

விம்பிள்டனில் பட்டம் வென்ற இளம் இந்தியர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், சிறுமியர் பிரிவில் பட்டம் வென்ற ஒரே இந்தியர் சானியாதான். அதேபோல ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் சானியாதான்.

பதக்கங்கள் ஏராளம்....

பதக்கங்கள் ஏராளம்....

ஆப்ரோ ஆசிய போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்றுள்ளார் சானியா. அதேபோல ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6 பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் 2 பதக்கம் வென்றுள்ளார்.

அர்ஜூனா விருது

அர்ஜூனா விருது

மிகவும் இளம் வயதிலேயே அர்ஜூனா விருதையும் வென்றவர் சானியா. பத்மஸ்ரீ விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.

மகேஷ் பூபதியுடன் சேர்ந்து

மகேஷ் பூபதியுடன் சேர்ந்து

2009ம் ஆண்டு மகேஷ் பூபதியும் இவரும் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றனர்.

தரவரிசையிலும் அசத்தல்

தரவரிசையிலும் அசத்தல்

இவர் ஒற்றையர் பிரிவில் 27வது ரேங்க வரை முன்னேறியவர். இதைச் செய்த முதல் இந்தியா வீராங்கனை சானியாதான். அதே போல இரட்டையர் பிரிவில் 14வது ரேங்க் வரை வந்துள்ளார்.

30 லட்சம் லைக்

30 லட்சம் லைக்

தற்போது இவரது பேஸ்புக் பக்கம் 30 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இதை பெருமையுடன் தனது ஸ்டேட்டஸில் குறிப்பிட்டுள்ளார் சானியா. அனைவருக்கும் பெரிய நன்றி.. உங்களது அன்புதான் என்னை உயர்த்தியது என்று குறிப்பிட்டுள்ளார் சானியா....

Story first published: Tuesday, February 18, 2014, 15:28 [IST]
Other articles published on Feb 18, 2014
English summary
Tennis star Sania Mirza has got 3 million likes for her FB page.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X