For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேல் ரத்னா விருது பெறப் போகும் 2வது டென்னிஸ் ஸ்டார்.. சானியா மிர்ஸா

டெல்லி: இந்திய விளையாட்டுத்துறையில் மிகவும் உயரிய விருதான கேல் ரத்னா விருதினைப் பெறவுள்ளார் சானியா மிர்ஸா. டென்னிஸ் ஸ்டார்களில் இந்த விருதை முதலில் பெற்றவர் லியாண்டர் பயஸ். அடுத்து இந்த விருதினை சானியா மிர்ஸா பெறவுள்ளார்.

சானியா மிர்ஸாவின் பெயர் மட்டுமே கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் அவருக்கு விருது கிடைப்பது உறுதியாகி விட்டது.

தற்போது மகளிர் இரட்டையர் பிரிவில் தரிவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்கிறார் சானியா. சமீப காலமாக தனது துறையில் பல சாதனைகளையும் படைத்து வருகிறார்.

முதல் மரியாதை லியாண்டருக்கு

முதல் மரியாதை லியாண்டருக்கு

டென்னிஸ் துறையில் முதல் முறையாக கேல் ரத்னா விருது பெற்ற பெருமை டென்னிஸ் சூப்பர் ஸ்டார் லியாண்டர் பயஸையே சாரும். 1996ம் ஆண்டு கேல் ரத்னா விருது பெற்றார் பயஸ்.

அட்லாண்டாவில் அசத்திய பயஸ்

அட்லாண்டாவில் அசத்திய பயஸ்

அட்லாண்டாவில் நடந்த லிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அபாரமாக ஆடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்ததைத் தொடர்ந்து அவரைக் கெளரவிக்கும் வகையில் கேல் ரத்னா விருது பயஸுக்கு அளிக்கப்பட்டது.

2வது ஸ்டார் சானியா

2வது ஸ்டார் சானியா

இந்த நிலையில் தற்போது 2வது டென்னிஸ் ஸ்டாராக சானியா மிர்ஸா இந்த விருதினைப் பெறவுள்ளார். அதேசமயம், இந்த விருதி்னைப் பெறும் முதல் டென்னிஸ் வீராங்கனை இவர்தான்.

சாதனைகள்

சாதனைகள்

இந்த ஆண்டு 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் சானியா. அதில் முக்கியமானது இவரும், மார்ட்டினா ஹிங்கிஸும் இணைந்து பெற்ற மகளிர் விம்பிள்டன் இரட்டையர் பட்டமாகும்.

தோல்வியைத் தழுவிய தீபிகா பல்லிகல்

தோல்வியைத் தழுவிய தீபிகா பல்லிகல்

முன்னதாக கேல் ரத்னா விருதுக்கு சானியா தவிர தீபிகா பல்லிகல், விகாஸ் கெளடா, டின்டு லூக்கா, பி.வி. சிந்து, ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. கடைசியில் சானியாவின் பெயர் தேர்வு செய்யப்பட்டது.

சானியாவின் பிற சாதனைகள்

சானியாவின் பிற சாதனைகள்

சானியா மிர்ஸா, 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும், மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

அர்ஜூனா விருது

அர்ஜூனா விருது

2004ம் ஆண்டு இவர் அர்ஜூனா விருது பெற்றிருந்தார். 2006ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.

Story first published: Wednesday, August 12, 2015, 11:10 [IST]
Other articles published on Aug 12, 2015
English summary
Sania Mirza is the second tennis player ever to be named for the country's highest sporting honour, Khel Ratna, after the legendary Leander Paes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X