For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 308 வெற்றிகள்... செரீனா புதிய சாதனை

By Mathi

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றில் வென்ற செரீனா வில்லியம்ஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றவர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சுவீடனின் ஜொஹன்னா லார்சனை எதிர்த்து ஆடினார்.

4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இப்போட்டியின் தொடக்கம் முதலே செரீனா ஆதிக்கம் செலுத்தினார். பின்னர் 6 2, 6 1 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெடரர் சாதனை சமன்

பெடரர் சாதனை சமன்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் பெறும் 307-வது வெற்றியாகும் இது. இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீராங்கனை என்ற மார்ட்டினா நவ்ரத்திலோவாவின் சாதனையை அவர் முறியடித்தார். ஆண்கள் பிரிவில் 307 வெற்றிகளைப் பெற்ற ரோஜர் பெடரரின் சாதனையையும் அவர் சமன் செய்திருந்தார்.

புதிய சாதனை

புதிய சாதனை

இதனைத் தொடர்ந்து 4-வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தானை சேர்ந்த ஷிவ்டோவை வீழ்த்தினார் செரீனா. இதனால் ரோஜர் பெடரரின் சாதனையையும் முறியடித்து 308 வெற்றிகளுடன் புதிய சாதனை படைத்திருக்கிறார் செரீனா.

காலிறுதியில்...

காலிறுதியில்...

செரீனா வில்லியம்ஸ் கால்இறுதியில் 5-ம் நிலை வீராங்கனை ஷிமோனா ருமேனியாவின் ஹெலப்பை சந்திக்கிறார்.

Story first published: Tuesday, September 6, 2016, 15:39 [IST]
Other articles published on Sep 6, 2016
English summary
Serena Williams set a new Grand Slam record of 308 victories with a win over Yaroslava Shvedova of Kazakhstan at the US Open in New York.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X