For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்ட்டினா, எவர்ட் வரிசையில் செரீனா... 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்!

நியூயார்க்: ஒரு வழியாக தனது பட்ட வறட்சியை சரி செய்து விட்டார் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். இந்த ஆண்டின் மூன்று முக்கிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தவற விட்ட அவர், இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டமான அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.

மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தனது தோழியான கரோலின் வோஸ்னியாக்கியை அழகான 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வீ்ழ்த்தி தனது 6வது அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார் செரீனா.

இது அவருக்கு மொத்தத்தில் 18வது கிராண்ட்ஸ்லாம் ஆகும். இதன் மூலம் ஏற்கனவே 18 பட்டங்களை வென்றுள்ள ஜாம்பவான்கள் மார்ட்டினா நவ்ரத்திலோவா மற்றும் கிறிஸ் எவர்ட் ஆகியோரின் சாதனையுடன் செரீனாவின் சாதனையும் இணைந்துள்ளது

லீடிங் மார்கரெட் கோர்ட்

லீடிங் மார்கரெட் கோர்ட்

ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் சாதனை என்று பார்த்தால் அது இன்னும் மார்கரெட் கோர்ட்தான். அவர் 24 பட்டங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

2வது இடத்தில்

2வது இடத்தில் "ஸ்டைல் ராணி" ஸ்டெபி கிராப்

அதேபோல 2வது இடத்தில் முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப் 22 பட்டங்களுடன் இருக்கிறார். இவர்களை செரீனா முந்தி புதிய வரலாறு படைப்பாரா என்பது தெரியவில்லை.

செம மகிழ்ச்சி

செம மகிழ்ச்சி

பட்டம் வென்றதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் செரீனா. பின்னர் அவர் பேசுகையில் இந்த ஆண்டின் முதல் பட்டமே எனது 18வது பட்டமாக அமைந்தது மகிழ்ச்சி தருகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார் செரீனா.

கரோலினுக்கும் வாழ்த்துகள்

கரோலினுக்கும் வாழ்த்துகள்

மேலும் செரீனா கூறுகையில், கரோலினையும் நான் வாழ்த்துகிறேன். நான் எப்படியெல்லாம் போராடி இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன் என்பதை அவர் அறிவார். அவர் அருமையான தோழி. நல்ல பெண்.

நீயும் வெல்வாய் கரோ

நீயும் வெல்வாய் கரோ

ஒரு நாள் கரோலினும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார். அவரை நான் வாழ்த்துகிறேன் என்றார் செரீனா.

ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

உண்மையில் அமெரிக்க ஓபன் பட்டத்தை தொடர்ந்து 3வது முறையாக வென்றுள்ளார் செரீனா. இதற்கு முன்பு கிறிஸ் எவர்ட்தான் இப்படி ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்றிருந்தார். எவர்ட்டும் கூட 6 அமெரிக்க ஓபன் பட்டங்களை வென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

செரீனாவுக்குப் பொருத்தமான பட்டம்

செரீனாவுக்குப் பொருத்தமான பட்டம்

முதல் கிராண்ட்ஸ்லாமுக்காக 2009ம் ஆண்டிலிருந்து போராடி வரும் கரோலின் வோஸ்னியாக்கி செரீனாவாப் பாராட்டியுள்ளார். இந்தப் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் செரீனா. என்னை விட சிறப்பாக அவர் ஆடினார் என்று அவர் செரீனாவை வாழ்த்தியுள்ளார்.

19 வயதில் தவற விட்ட கரோலின்

19 வயதில் தவற விட்ட கரோலின்

2009ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தார் கரோலின். அப்போது கிளிஸ்டரிடம் போராடித் தோல்வியுற்றார். அன்று முதல் இன்று வரை அவர் தொடர்ந்து பட்டம் பெற போராடி வருகிறார். இத்தனைக்கும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் எதுவும் பெறாமலேயே உலகின் முதல் நிலை வீராங்கனையாக சிறிது காலம் இருந்தவர் கரோலின் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Monday, September 8, 2014, 10:24 [IST]
Other articles published on Sep 8, 2014
English summary
World number one Serena Williams won her sixth US Open title Sunday, overpowering Caroline Wozniacki 6-3, 6-3 to take her Grand Slam tally to 18. The world number one, shut out in the first three majors of the year, at last joined Chris Evert and Martina Navratilova on 18 trailing only the 22 of Steffi Graf on the Open era list and six behind the all-time record held by Margaret Court.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X