For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரெஞ்ச் ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-பூபதி பைனலுக்கு தகுதி!

By

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-மகேஷ் பூபதி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்சா ஜோடி, கலினா வோஸ்கபோவா-டேனியலி பிராஸிகலி ஜோடி எதிர்கொண்டது.

துவக்கம் முதலே பரபரப்பாக ஆடிய இந்திய ஜோடி முதல் செட்டை 39 நிமிடங்கள் போராடி 6-4 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. அதன்பிறகு 2வது செட்டில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 6-2 என்ற செட்டில் வெற்றிப் பெற்றது இதன்மூலம் 70 நிமிடம் போராடத்திற்கு பிறகு, இந்திய ஜோடி 6-4, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றிப் பெற்று, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

முன்னதாக மகேஷ் பூபதி, ஜப்பானின் ரிகா ஹிராகியுடன் ஜோடி சேர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த 1997ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல சானியா மிர்சா, ரஷ்யாவின் வெஸ்னினாவுடன் ஜோடி சேர்ந்து கடந்த 2011ம் ஆண்டு பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

Story first published: Thursday, June 7, 2012, 16:57 [IST]
Other articles published on Jun 7, 2012
English summary
Indian tennis stars Sania Mirza and Mahesh Bhupathi reached their maiden French Open mixed doubles final. Mirza and Bhupathi outplayed Galina Voskoboeva and Danielle Bracciali 6-4, 6-2 to enter the mixed doubles final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X