For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன இதெல்லாம்.. உலகத்திலேயே கொரோனா அதிகம் இருக்கும் இடத்தில் அமெரிக்க ஓபன்.. கடுப்பில் வீரர்கள்!

நியூயார்க் : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் எந்த சர்வதேச டென்னிஸ் தொடரும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், டென்னிஸ் வீரர்கள் பலர் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

என்னோட வெற்றிக்காக நான் தோனியை நம்பிக்கிட்டு இல்ல... குல்தீப் யாதவ் திட்டவட்டம்என்னோட வெற்றிக்காக நான் தோனியை நம்பிக்கிட்டு இல்ல... குல்தீப் யாதவ் திட்டவட்டம்

நியூயார்க்

நியூயார்க்

வழக்கமாக நியூயார்க் நகரில் தான் இந்த தொடர் நடைபெறும். இந்த ஆண்டும் அங்கே அமெரிக்க ஓபன் தொடரை நடத்த உள்ளதாக நியூயார்க் கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நியூயார்க் நகரம் தான் உலகிலேயே கொரோனா வைரஸால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பாதிப்பு

அமெரிக்காவில் பாதிப்பு

கொரோனா வைரஸால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா தான். அங்கே 22 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,19,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க் நகரம் தான் கடுமையாக பாதிக்கபப்டுள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

இந்த நிலையில், நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை நடத்தும் முடிவு சரியானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கே தான் தொடரை நடத்தி ஆக வேண்டும் என்றால் தொடரை தள்ளிப் போடும் முடிவை எடுக்கலாம்.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

விம்பிள்டன், ஆஸ்திரேலியா ஓபன் உள்ளிட்ட கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் ரத்து செய்யப்பட்டு அல்லது தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன் தொடர் நோய்களுக்கு எதிராக காப்பீடு செய்யப்பட்டு இருந்ததால் நஷ்டத்தை ஈடு கட்டும்.

காப்பீடு

காப்பீடு

ஆனால், அமெரிக்க ஓபன் தொடர் அது போன்ற காப்பீட்டை செய்யவில்லை. அதனால், தொடரை ரத்து செய்தால் நஷ்டத்தை ஈடுகட்டும் வாய்ப்பு இல்லை. அதன் காரணமாகவே அமெரிக்க ஓபன் தொடரை நடத்த நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

எப்போது நடக்கும்?

எப்போது நடக்கும்?

ரசிகர்கள் இல்லாத அரங்கில் அனைத்து சுகாதார, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்த டென்னிஸ் தொடரை நடத்த உள்ளதாக நியூயார்க் கவர்னர் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை இந்த தொடர் நடக்க உள்ளது.

அதிருப்தி

அதிருப்தி

ஆனால், டென்னிஸ் வீரர்கள் இந்த தொடர் குறித்த அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும், வீரர்கள் தங்களுடன் ஒருவரை மட்டுமே அழைத்து வர வேண்டும், ஹோட்டல் அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது, பயிற்சி செய்ய கட்டுப்பாடு ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல முன்னணி டென்னிஸ் வீரர்கள் இந்த கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

Story first published: Wednesday, June 17, 2020, 16:15 [IST]
Other articles published on Jun 17, 2020
English summary
US Open to go ahead amid coronavirus, some of the players unwilling to participate over pandemic fear and restrictions.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X