For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

20வது முறையாக யுஎஸ் ஓபனில் களமிறங்கிய "பெரியம்மா"

By Staff

நியூயார்க்: 20வது முறையாக, யுஎஸ் ஓபன் டென்னில் போட்டியில் பங்கேற்றுள்ள, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

1997ல் முதல் முறையாக, யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடினார் வீனஸ். அப்போது தரவரிசையில் இல்லாத, 17 வயது சிறுமியாக இருந்த வீனஸ், தனது முதல் சுற்று ஆட்டத்திலேயே மற்றவர்களை மூக்கில் விரல் வைக்க வைத்தார்.

லாட்வியாவின் லாரிசா நெய்லாண்டை 5-7, 6-0, 6-1 என்ற புள்ளிகளில் வென்ற வீனஸ், பைனலில், மார்ட்டினா ஹிங்கிசிடம் தோல்வியடைந்தார்.

20வது முறையாக

20வது முறையாக

தற்போது, 20வது முறையாக, யுஎஸ் ஓபன் போட்டியில் அவர் பங்கேற்றுள்ளார். நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், ஸ்லோவாகியாவின் விக்டோரியா குஸ்மோவாவை 6-3, 3-6, 6-2 என்ற கணக்கில் வென்றார்.

7 முறை

7 முறை

2000 மற்றும், 2001ல் யுஎஸ் ஓபன், 5 முறை விம்பிள்டன் பட்டங்களை அவர் வென்றுள்ளார். தற்போது, 37 வயதாகும் வீனஸ், இந்தாண்டில், விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பைனல் வரை முன்னேறினார்.

பெரியம்மா

பெரியம்மா

வீனஸின் தங்கை செரீனா வில்லியம்ஸ் விரைவில் தாயாக உள்ளார். இந்தாண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் கர்ப்பத்துடன் பங்கேற்ற செரீனா, அக்கா வீனஸை வென்றார்.

அதே உற்சாகம்.. அதே வேகம்

அதே உற்சாகம்.. அதே வேகம்

விரைவில் பெரியம்மா ஆகப்போகிற வீனஸ், 20 ஆண்டுகளுக்கு முன் களத்தில் இறங்கிய அதே மனநிலையில், அதே உற்சாகத்தில் தற்போதும் உள்ளதாகக் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 29, 2017, 13:31 [IST]
Other articles published on Aug 29, 2017
English summary
Venus Williams playing on ther 20th US Open starts with win
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X