For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விம்பிள்டன் டென்னிஸ் - குடும்பத்தை திட்டிய கிர்கியாஸ்.. அமைதி காத்த ஜோகோவிச்..7வது முறையாக சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பல டிராமாக்களுக்கு நடுவே ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக கைப்பற்றினார்.

கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் முறையாக கிர்கியாசும், 31வது முறையாக ஜோகோவிச்சும் விளையாடினர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக் கிர்கியாஸ் சர்ச்சைக்கு பெய்ா போனவர். எதிர் வீரர்களிடம் அநாகரிகமாக நடப்பது. பார்வையாளர்களை திட்டுவது போன்ற சேட்டையில் ஈடுபடுவார்.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

ஜோகோவிச்சை ஏற்கனவே இவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் இருவரும் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வழக்கம் போல் தனது எம்.ஜி.ஆர் டெக்னிக்கை ஜோகோவிச் வெளிப்படுத்தினார். முதல் செட்டில் கிர்கியாஸ் அபாரமாக விளையாட, அதனை ஜோகோவிச் 4க்கு6 என்ற கணக்கில் இழந்தார்.

குடும்பத்தை திட்டினார்

குடும்பத்தை திட்டினார்

அடுத்த செட்டில் ஜோகோவிச், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவ்வளவு நேரம் அமைதி காத்த கிர்கியாஸ் திடீரென்று,பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த தனது பயிற்சியாளர், குடும்பத்தினரையே திட்ட தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சல் போட்டு கொண்டே அநாகரீகமாக விளையாடினார் கிர்கியாஸ்.

ஜோகோவிச் வெற்றி

ஜோகோவிச் வெற்றி

கிர்கியாஸ் கோவப்பட தொடங்கியதுமே, வெற்றி அவரது கையை விட்டு நழுவ தொடங்கியது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வார்களே, அதே போல் கிர்கியாஸ் கோவத்தில், அவரது கவனம் சிதற அதனை ஜோகோவிச் பயன்படுத்தி கொண்டு அடுத்த மூன்று செட்டையும் வென்றார். இதன் மூலம் மூன்று மணி நேரம் ஒரு நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச், 4க்கு6, 6க்கு3, 6க்கு4, 7க்கு6 என்ற செட் கணக்கில் வென்றார்.

சாதனை சமன்

சாதனை சமன்

இதன் மூலம் தனது 7வது விம்பிள்டன் பட்டத்தை வென்று, பீட் சாம்பிராசின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். அதிகபட்சமாக ரோஜர் பெடரர் 8 விம்பிள்டன் பட்டத்தை வென்று இருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஜோகோவிச்சுக்கு இது 21வது கிராண்ட் ஸ்லாமாகும். ஆஸ்திரேலியாவில் நடந்த அனுபவத்திற்கு பிறகு, இந்த வெற்றி தமக்கு தேவைப்பட்டதாக கூறிய ஜோகோவிச், நிக் கிர்கியாசிடம் ப்ரோமேன்ஸ் ஏற்பட்டுவிட்டதாக கிண்டலாக கூறினார்.

Story first published: Monday, July 11, 2022, 13:22 [IST]
Other articles published on Jul 11, 2022
English summary
Wimbledon 2022 – Djokovic won the 7th men singles title விம்பிள்டன் டென்னிஸ் - குடும்பத்தை திட்டிய கிர்கியாஸ்.. அமைதி காத்த ஜோகோவிச்..7வது முறையாக சாம்பியன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X