
பாஸ்போர்ட் தொலைந்தது
டென்மார்க் ஓபன் தொடரில் பங்கேற்க பயணம் மேற்கொண்டிருந்த காஷ்யப் இடையே ஆம்ஸ்டர்டாம் நகரில் தன் பாஸ்போர்ட்டை தவறவிட்டுள்ளார். இதையடுத்து ட்விட்டரில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கேட்டுள்ளார்.
|
உதவி கேட்டு ட்வீட்
அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "வணக்கம் மேடம், நேற்று இரவு ஆம்ஸ்டர்டாம் நகரில் என் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டேன். நான் அடுத்து டென்மார்க் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஜெர்மனியின் சார்லக்ஸ் ஓபன் ஆகிய போட்டிகளில் பங்கேற்க செல்ல வேண்டும். அக்டோபர் 14 அன்று டென்மார்க் செல்ல டிக்கெட் எடுத்துள்ளேன். இந்த விஷயத்தில் உங்கள் உதவி தேவை" என குறிப்பிட்டுள்ளார். இதோடு, விளையாட்டுத் துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரின் கணக்குகளையும் டேக் செய்துள்ளார்.

திருமண செய்தி
பாருபள்ளி காஷ்யப் வரும் டிசம்பர் 16 அன்று சக பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலை திருமணம் செய்ய உள்ளார். இதற்கிடையே, இவரது பாஸ்போர்ட் தொலைந்து சிக்கிக் கொண்டுள்ள செய்தி வந்துள்ளது.
|
தூதர் ட்வீட்
இவரது ட்வீட்டை கண்ட நெதர்லாந்து நாட்டிற்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி தூதரகத்திற்கு உடனடியாக வந்து அமர் வர்மா என்ற நபரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.