காமன்வெல்த் 2018: ஆண்கள் பேட்மிட்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி

Posted By:

கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பாட்மிட்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சாத்விக், செய்ராக் சந்திரசேகர் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில், இந்தியாவின் பேட்மிட்டன் குழு மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளது. சாய்னா நேவால், சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் என்று அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்றுள்ளனர். பாட்மிட்டன் பிரிவில் ஒரு தங்கம் உட்பட ஆறு பதக்கம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

Commonwealth 2018: Satwik, Chandrashekhar Chirag pair gets silver for India in badminton men doubles

இன்று நடந்த ஆடவர் பாட்மிட்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சாத்விக், செய்ராக் சந்திரசேகர் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. இங்கிலாந்தின் மார்கஸ், கிறிஸ் ஜோடியிடம் 13-21 16-21 கணக்கில் தோல்வியை தழுவி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

இந்தியாவுக்கு கடைசியாக நடந்த பாட்மிட்டன் போட்டியோடு சேர்த்து இதுவரை 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என, 66 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

English summary
Commonwealth 2018: Satwik, Chandrashekhar Chirag pair gets silver for India in badminton men doubles.
Story first published: Sunday, April 15, 2018, 11:33 [IST]
Other articles published on Apr 15, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற