காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கன்ஃபார்ம்.. பைனலில் சாய்னா-பிவி சிந்து மோதல்

Written By: bahanya

கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியாவின் சாய்னா நேவால் , பிவி சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் கிடம்பி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின், கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

CWG2018: another gold confirmed for india, pv sindhu and Saina facing in Badminton final

இதுவரை 21 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் 48 பதக்கங்களை குவித்துள்ளது இந்தியா. இந்நிலையில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு சாய்னா நேவால், பிவி சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் கிடம்பி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு தங்கம், வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது. அதே போல் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடம்பி, மலேசியாவின் சாங் வெய் லீ உடன் எதிர்க்கொள்கிறார்.

English summary
PV Sindhu facing Saina Nehwal in the Badminton Finals at comman wealth games. Another Gold and Silver Confirmed for india.
Story first published: Saturday, April 14, 2018, 13:06 [IST]
Other articles published on Apr 14, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற