For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நாடு ஒரு ஜோக்.. எனக்கு விருது இல்லையாம், எதிலுமே ஆடாத அவருக்கு விருதாம்.. கொந்தளித்த இளம் வீரர்

டெல்லி: அர்ஜுனா விருதுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பாட்மிண்டன் வீரர் எச்.எஸ்.பிரணாய் பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை.

தன்னை விட குறைந்த அளவே சாதனைகள் செய்துள்ள சமீர் ரெட்டி பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு அவர் தன் அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தி உள்ளார்.

பாட்மிண்டன் அமைப்பு கூறி உள்ள விளக்கமும் சரியானதாக இல்லை. அதனால், மேலும் சர்ச்சை எழுந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடறது ரொம்ப சவாலானது... மனம்திறந்த ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடறது ரொம்ப சவாலானது... மனம்திறந்த ஹர்திக் பாண்டியா

அர்ஜுனா விருது

அர்ஜுனா விருது

2020ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் பரிந்துரைப் பட்டியலை இந்திய பாட்மிண்டன் அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் இரட்டையர் பிரிவில் ஆடி வரும் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி மற்றும் ஒற்றையர் பிரிவு வீரர் சமீர் வர்மா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

மூவர் நிலை

மூவர் நிலை

இந்த மூவரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி 2018 காமன்வெல்த் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். சமீர் வர்மா இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றதில்லை. அவர் கடந்த ஆண்டு அத்தனை சிறப்பான செயல்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை.

விளக்கம்

விளக்கம்

அவரது சிறப்பான வெற்றிகள் 2016 ஹாங்காங் ஓபன் இறுதிப் போட்டியில் ஆடியது, 2018இல் மூன்று பட்டங்கள் வென்றது ஆகியவை மட்டுமே. சமீர் ரெட்டியை தேர்வு செய்தது பற்றி விளக்கம் அளித்துள்ள இந்திய பாட்மிண்டன் அமைப்பு, கடந்த நான்கு ஆண்டுகளில் வீரர்களின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

பிரணாய் சிறப்பான செயல்பாடு

பிரணாய் சிறப்பான செயல்பாடு

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளிலும் பிரணாய் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். 2018இல் காமன்வெல்த் தொடரில் கலப்பு அணியில் ஒரு அங்கமாக இருந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.

அதிர்வலைகளை ஏற்படுத்தினார்

அதிர்வலைகளை ஏற்படுத்தினார்

2017இல் பிரணாய் உலகின் நம்பர் 1 பாட்மிண்டன் வீரர் லீ சாங் வெய் மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங் ஆகியோரை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தி இந்தோனேசிய ஓபன் தொடரில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதே ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியிலும் ஆடினார்.

கொந்தளித்துள்ளார் பிரணாய்

கொந்தளித்துள்ளார் பிரணாய்

இத்தனை முக்கிய வெற்றிகளை பெற்றும் தன்னை இரண்டு ஆண்டுகளாக அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யாமல் இருப்பதை சுட்டிக் காட்டி கொந்தளித்துள்ளார் பிரணாய். அவரது கருத்தால் இந்திய பாட்மிண்டன் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

ஒரு ஜோக்

ஒரு ஜோக்

"காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவரை பரிந்துரை செய்யவில்லை. அந்த பெரிய தொடர்களில் ஆடாத ஒருவரை பரிந்துரை செய்துள்ளார்கள். இந்த நாடு ஒரு ஜோக்" என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

Story first published: Wednesday, June 3, 2020, 20:13 [IST]
Other articles published on Jun 3, 2020
English summary
HS Prannoy questions he was not nominated for Arjuna award for the second year. He also says he won better than Sameer Reddy, who is nominated.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X