கொரியா ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் பிவி சிந்து!

Posted By:

சியோல்: கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தென்கொரிய தலைநகர் சியோலில் கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

PV Sindhu enters in Korea open badminton finals

இதில் இந்தியாவில் பிவி சிந்து, சீனாவின் பிங் ஜியாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை கைப்பற்றிய பிவி சிந்து அடுத்த சுற்றை பறிகொடுத்தார். இதையடுத்து சுதாரித்து விளையாடிய சிந்து 21 - 10 , 17 -21 , 21 - 16 என்ற செட் கணக்கில் வென்றார்.

இதன்மூலம் பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.

இதில் ஜப்பானின் நோஸோமி ஒகுஹராவை பிவி சிந்து எதிர்கொள்கிறார். அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நோஸோமி சிந்துவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 16, 2017, 13:33 [IST]
Other articles published on Sep 16, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற