'மோசமாக' நடந்துகொண்ட இண்டிகோ ஏர்வேஸ் ஊழியர்.. பொங்கிய பிவி சிந்து

Posted By:

மும்பை: இண்டிகோ ஏர்வேஸ் நிறுவன ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை மிகவும் கோபமாக டிவிட்டரில் எழுதி இருக்கிறார் பிரபல பாட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து. அந்த டிவிட்டில் மிகவும் கோபமாக பேசியிருக்கும் சிந்து அந்த நிறுவன ஊழியர் குறித்து புகார் அளித்து இருக்கிறார்.

மேலும் அந்த நிறுவன ஊழியர் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமாக இருந்தது என்றும் அவர் தனது டிவிட்டில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது இந்த டிவிட்டுக்கு இண்டிகோ நிறுவனம் பதில் அளித்து இருக்கிறது.

ஆனால் அந்த பதிலில் திருப்தி ஆகாத சிந்து அதற்கும் மிகவும் கோபமான முறையில் பதில் அளித்து இருக்கிறார். இந்த டிவிட் மூலம் சிந்து களத்தில் மட்டுமல்ல வெளியிலும் தான் கோவக்காரிதான் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

சிந்துவுக்கு பிரச்சனை

இன்று காலை பிரபல பாட்மிட்டன் வீரர் பிவி சிந்து டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தின் ஊழியர் ஒருவர் அவரை மிகவும் தகாத முறையில் நடத்தி இருக்கிறார். அஜிதேஷ் என்ற பெயர் கொண்ட அந்த விமான ஊழியர் சிந்துவை மிகவும் மோசமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பிவி சிந்து இப்போது டிவிட்டரில் இண்டிகோ நிறுவனத்தில் சரியான சர்விஸ் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கோபமடைந்த சிந்து

அதன்படி அவர் டிவிட்டரில் "இன்று நான் '6E 608' என்ற எண் உள்ள இண்டிகோ விமானத்தில் செல்ல காத்துக் கொண்டு இருந்தேன். அப்போது அங்கு இருந்த ஊழியர் என்னை மிகவும் கேவலமாக நடத்தினார். அவர் பெயர் அஜிதேஷ். பக்கத்தில் இருந்த அஸிமா என்ற ஊழியர் அவரை அமைதியாக இருக்க சொன்ன பின்பும் அவர் அமைதியாக இல்லை. அவர் எங்கள் இருவரையும் திட்டினார்'' என்று கோபமாக எழுதி இருக்கிறார்.

சிந்துவை பேசுவதற்கு அழைத்த இண்டிகோ

இந்த நிலையில் அவரது டிவிட்டை பார்த்த இண்டிகோ விமான நிறுவனம் சிந்துவிடம் பேச முடிவு செய்தது. இதையடுத்து சிந்துவிடம் பேச முடியுமா என்று டிவிட்டரில் கேட்டது. அவர்கள் டிவிட்டில் "நாங்கள் உங்களிடம் இது குறித்து பேச விரும்புகிறோம். எங்களிடம் நீங்கள் அளித்திருக்கும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாமா'' என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

கோபமாக பதில் அளித்த சிந்து

இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் பேச்சவார்த்தைக்கு அழைத்ததை கண்டு சிந்து மீண்டும் கோபம் அடைந்தார். அதையடுத்து அவர் தனது டிவிட்டில் ''அங்கு என்ன நடந்தது என்பது எங்களுடன் இருந்த அஸிமா என்ற ஊழியருக்கு தெரியும். அவரிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு விளக்குவார்'' என்று பதில் அளித்து இருக்கிறார்.

Story first published: Saturday, November 4, 2017, 15:28 [IST]
Other articles published on Nov 4, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற