For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியாத் இந்திய சங்கம் நடத்திய முதல் இறகுப்பந்து தொடர்.. சவுதியில் நடந்த கலக்கல் போட்டி!

ரியாத் இந்திய சங்கம் நடத்திய முதல் இறகுப்பந்து தொடர்.. சவுதியில் நடந்த கலக்கல் போட்டி!

By Shyamsundar

ரியாத்: சவுதியில் முதல்முறையாக 'ரியாத் இந்திய சங்கம்' இறகுப்பந்து போட்டி நடத்தி இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த இந்த ஆடவர் இரட்டையர் இறகுப்பந்து தொடர்தான் அங்கு நடந்த முதல் இந்திய சங்கம் ஒன்றின் இறகுப்பந்து தொடர் ஆகும்.

சவுதியில் இந்திய மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அங்கு ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்கள் ஒன்றாக சேர்ந்து சங்கங்கள் அமைத்து இருக்கிறார்கள். இது போன்ற சங்கங்கள் தங்களுக்குள் நிறைய விளையாட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம்.

Riyadh Indian Association conducts it's first badminton tournament

அந்த வகையில் இரண்டு வாரம் முன்பு சவுதியில் இருக்கும் 'ரியாத் இந்திய சங்கம்' இறகுப்பந்து போட்டி நடத்தியது. சவுதியில் இருக்கும் இந்திய சங்கம் ஒன்று அதிகாரப்பூர்வமாக நடத்திய முதல் இறகுப்பந்து போட்டி இதுதான்.

ரியாத் இந்திய சங்கத்தின் தலைவர், துணை தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலையில் 'ரௌதாவில்' உள்ள சின்மர் இறகுப்பந்து உள்அரங்கத்தில் போட்டி நடந்தது. இதில் 10 இரட்டையர் அணிகள் கலந்து கொண்டன. துணை தலைவரான திரு. சேகர் இந்த தொடரை ஒருங்கிணைத்தார்.

இந்த தொடரில் விளையாடிய அனைத்து அணிகளும் தங்களின் சிறப்பான ஆட்டத்தினை வெளிபடுத்தின. மிகவும் விறுவிறுப்பாக சென்ற தொடரில் அரை-இறுதி சுற்றில் பிஜோய்-நஸீம் மற்றும் சன்னி-ஆலன் அணிகள் தோல்வியை தழுவின.

Riyadh Indian Association conducts it's first badminton tournament

இறுதிப்போட்டியில் சேகர்-ரோஜி அணி மற்றும் ஹபீப்-உம்மர்குட்டி அணிகள் மோதின. இதில் சேகர்-ரோஜி அணி 21-5 மற்றும் 21-6 என்ற நேர்செட்களில் ஹபீப்-உம்மர்குட்டி அணியை வீழ்த்தி ரியாத் இந்திய சங்க இறகுப் போட்டியின் (RIA) முதல் தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரின் நடுவராக 'பவுலோஸ் கரிப்பாயி' இருந்தார். சங்க தலைவர் பாலச்சந்திரன் மற்றும் துணை தலைவர் திரு. மெஹ்பூப் வெற்றிபெற்ற அணியான சேகர்-ரோஜிக்கு வெற்றிக்கோப்பை, பதக்கம் வழங்கினார்கள். மேலும் இவர்களுக்கு ரொக்கபரிசும் வழங்கப்பட்டது.

Story first published: Wednesday, January 10, 2018, 20:50 [IST]
Other articles published on Jan 10, 2018
English summary
Riyadh Indian Association conducted it's first badminton tournament in Saudi. Sekar - Roji and Habeeb -Umar Kutty teams have played in the finals. Sekar - Roji team won the match by 21-5 & 21-6 sets. RIA chief Balachandran and Associate Chief Mehboob gave trophies to players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X